தேசிய மாணவர் படை தின விழா- கோவையில் இரத்த தானம் செய்த என்சிசி மாணவர்கள்...

published 1 week ago

தேசிய மாணவர் படை தின விழா- கோவையில் இரத்த தானம் செய்த என்சிசி மாணவர்கள்...

கோவை: தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு கோவையில் மாபெரும் இரத்ததானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒண்டிபுதூரில் உள்ள கோவை மண்டல தலைமை அலுவலகத்தில் இன்று முதல் 11-11-2024 முதல் 22-11-2024 வரையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழாவிற்கு கர்னல் இராமநாதன், கோவை மண்டல தலைமை இராணுவ அதிகாரி, மற்றும் டாக்டர் சரவணபிரியா RMO, கோவை அரசு மருத்துவக்கல்லூரி ஆகியோர் தலைமை வகித்தனர். நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படைதின சிறப்பு மற்றும் இரத்ததானத்தில் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு மாணவர்களிடையே ஏற்படுத்தப்பட்டது.

மேஜர் அசோக்குமார் முன்னிலையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததானம் நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர். கோவை, அரசு மருத்துவக்கல்லூரி அலுவலர்கள் உதவியுடன் சுமார் 60 யுனிட்டுக்கும் மேலாக இன்று இரத்தவங்கிக்கு இரத்தம் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வருகின்ற 22ம் தேதி வரை இந்த இரத்ததானம் நிகழ்வு நடைபெற உள்ளது. 

1000-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் இரத்தம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு பட்டாலியன் இராணுவ அதிகாரிகள், ஜேசிஓ-க்கள் இராணுவ அலுவலர்கள், தேசிய மாணவர் படை அலுவலர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe