கோவையில் நடைபெற்ற Rozgar Mela நிகழ்ச்சி- 191 பேருக்கு பணி நியமன ஆணை...

published 1 week ago

கோவையில் நடைபெற்ற Rozgar Mela நிகழ்ச்சி- 191 பேருக்கு பணி நியமன ஆணை...

கோவை: கோவையில் நடைபெற்ற Rozgar Mela நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, 191 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மத்திய மாநில அரசு துறைகளில் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட சுமார் 51,000 பணியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் பணி நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வு நாடு முழுவதும் 40 இடங்களில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி வளாகத்தில் 'ரோஜ்கார் மேளா' நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில், மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர், பங்கஜ் சவுத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

நிகழ்வில் பேசிய வானதி சீனவாசன், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி வாய்ப்பு பெற்றுள்ளவர்கள், மக்கள் சேவையை முதன்மையாகவும் அதனையே பெருமையாகவும் கருத வேண்டும் எனவும், நாட்டின் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக சிறப்பான முறையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.

இதனைத் இதனைத் தொடர்ந்து பேசிய மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும், மேலும் அவர்களை சிறந்த தொழில் முனைவோர்களாக ஆக்கும் விதமாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அதிக ஊக்கம் அளித்து வருவதாகவும், இதனால் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக உருவாகி வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அஞ்சல் துறை, இரயில்வே துறை மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை ஆகியவற்றில் புதிதாக பணியமர்த்தப்பட்ட 191 பேருக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe