BSNL வாங்கணுமா? வேண்டாமா? கோவையில் ஆர்ப்பாட்டம்!

published 1 week ago

BSNL வாங்கணுமா? வேண்டாமா? கோவையில் ஆர்ப்பாட்டம்!

கோவை: பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் செல்போன் சேவையில், ரிங்டோன் எனப்படும் அழைப்பு பாடல் ஹிந்தியில் அமைக்கப்பட்டு இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், செல்போன் கட்டணம் குறைவாக இருப்பதால், லட்சக் கணக்கான வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் இணைந்தனர்.

இதன் இடையே பி.எஸ்.என்.எல்  வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் செல்போன் இணைப்பில் ரிங்டோன் எனப்படும் அழைப்பு பாடல், அனைவருக்கும் இந்தியில் ஒலிக்கிறது. இது ஹிந்தி மொழியை மறைமுகமாக மக்கள் இடையே பரப்பும் திட்டம் என தந்தை பெரியார் திராவிட கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

உடனடியாக இந்தி ரிங்டோன் நீக்க வலியுறுத்தி, இன்று மாலை 5 மணி அளவில்  கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe