கோவையில் குவியும் MNC கம்பெனிகளின் முதலீடு!

published 1 year ago

கோவையில் குவியும் MNC கம்பெனிகளின் முதலீடு!

கோவை : கோயம்புத்தூர் மிகப்பெரிய MNC நிறுவனங்களிடம் இருந்து 2000 கோடி முதலீடுகள்  உலக மாநாடு 2024 முன்னதாக பெற இருக்கிறது. 

தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி 2024 இல் நடக்க இருப்பதால், பல்வேறு முக்கியமான முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு பற்றிய அறிவிப்பை தமிழ்நாடு முன்னாள் நிதி அமைச்சர் வெளியிட்டார்.

அதன்படி கோவை, விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் புதிய சிப்காட் பூங்காக்கள் சுமார் ரூ. 100 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது.

இந்தியாவில் கொரோனவிற்கு பிறகு பல்வேறு மாநிலங்கள் பொருளாதார வகையில் பின்னடைவை சந்தித்துள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் 1 லட்சம் கோடிக்கு மேல்  MNC நிறுவனங்களின் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கோவையை பொறுத்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் MNC ன் முதலீடு அதிகரித்து வருகிறது. முதலீடுகள் கோவையில் குவிந்து வரும் நிலையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe