23ஆம் புலிகேசி போல் தமிழகத்தில் முதலமைச்சர் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார் -அண்ணாமலை விமர்சனம்…

published 1 year ago

23ஆம் புலிகேசி போல் தமிழகத்தில் முதலமைச்சர் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார் -அண்ணாமலை விமர்சனம்…

கோவை: 23ஆம் புலிகேசி போல் தமிழகத்தில் முதலமைச்சர் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை கோவை கிணத்துக்கடவு மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டார்.  தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட கோவை-பாலக்காடு சாலை குனியமுத்தூர் பகுதியில் நடைபயணத்தை துவக்கிய அண்ணாமலையை ஏராளமானோர்  வரவேற்றனர்.மேலும் காவி மற்றும் பச்சை நிற பலூன் தோரணஙகள் மற்றும் மேள தாளஙகள் முழங்க ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அண்ணாமலையுடன் நடைபயணத்தில் பங்கேற்றனர்.

இதில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி,பாஜக விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அம்ர்பிரசாத் ரெட்டி,பொது செயலாளர் முருகானந்தம்,விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குனியமுத்தூரில் துவங்கிய நடைபயணம்  இடையர்பாளையம்,மாச்சம்பாளையம் மற்றும் குறிச்சி உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட சுந்தராபுரம் பகுதியில் நிறைவடைந்தது.சாலையில் நடந்து சென்ற அண்ணாமலையை காண வழியெங்கிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் காவல்துறையினரும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்..

இதனை தொடர்ந்து சுந்தராபுரம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.அப்போது பேசிய அவர்..

என் மண்,என் மக்கள் யாத்திரை 64 மற்றும் 65 வது பகுதியாக இன்று நடைபெறுகிறது.7 மணி நேரம் நடந்துள்ளோம்.குறிச்சி அரவான் கோவில் சனாதன தர்மத்தை அருமையாக எடுத்துரைத்துள்ளது.இந்த பகுதி மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 17 ஆயிரத்து 188 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.1455 கோடி கோவைக்கு மட்டும் ஒதுக்கீடு.கோவைக்கு இரண்டு ரயில் நிலைநிலையத்தை வழங்கும் முடிவில் போத்தனூர் ரயில் நிலையத்தை 25 கோடியில் அம்ருத் திட்டத்தில் உலகத்தரத்தில் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

50 சதம் வரை மின் கட்டணம் உயர்வு
நாளை முழு வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். எப்போதும் இல்லாத வகையில் திமுக உயர்த்தியுள்ளது.இதனால் தொழில் துறையினர் நாளை முழு கடையடைப்பை அறிவித்துள்ளனர்.

காங்கேயத்தில் யாரோ எழுதி கொடுத்ததை படித்திருக்கிறார்.தவறு தவறாக படித்து கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் 2கோடியே 27 லட்சம் தாய்மார்கள் உள்ளனர்.இதில் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளின் உரிமை தொகையை வாங்கியுள்ளனர்.

நாற்பது சதவீதம் பேருக்கு மெசேஜ் வந்தும் பணம் வரவில்லை. ஒரு சில நபர்களுக்கு  ஒரு ரூபாய் வந்துள்ளது.60சதவீதம் தாய்மார்களுக்கு இந்த தொகை வரவில்லை.

தாலிக்கு தங்கம்,மடிக்கணினி போன்றவற்றை நிறுத்திவிட்டு, பால்விலை நான்கு முறை, நெய் விலை மூன்று முறை உயர்த்தியுள்ளனர்.மாத மாதம் பத்தாயிரம் கொடுத்தாலும் உயர்த்தப்பட்ட கடணத்திற்கு ஈடாகாது..

முதல்வரிடம் நாட்டு நடப்பை பற்றி சொல்பவரை முதல்வருக்கு கொடுக்க பட்டீஸ்வரரிரடம் வேண்டுகிறேன்.23 ம் புலிகேசி போல் முதல்வர் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.மின் கட்டனத்தை உயர்த்தி விட்டு சாராய அமைச்சர் ஜெயில் இருக்கிறார்.

தமிழகத்தில் முத் ரா திட்டத்தில் இரண்டு லட்சம் கோடி கடன் தந்துள்ளோம்.நாளை தொழில் அமைப்பினர் கடையடைப்பு செய்வது வருத்தமான செய்தி.வெள்ளளூர் குப்பை கிடங்கு ஆசியாவில் ஃபேமஸ்.ஒரு நாளைக்கு 1000 கிலோ குப்பை வெள்ள்ளூரில் கொட்டுகிறோம்.சுற்றியுள்ள மக்களுக்கு காசநோய் உள்ளது.

அண்மையில் கோவை மேயர் தம்பி வீட்டின் முன்பு செந்தில் பாலாஜியின் ஆவணங்களை எரித்தார்.மக்கள் பிரதிநிதி பினாமியாக இருக்கிறார்களே தவிர மக்கள் பிரதிநிதியாக இல்லை.

கனிமவள மாஃபியாவை ஒழிக்க வேண்டும் என்பது  எங்களது குறிக்கோள் ஆனால் தினமும் 10 ஆயிரம் யூனிட் கடத்தப்பட்டு வருகிறது.இரண்டு ஆண்டுகள் இதே நிலைஇருந்தால் ஒன்றும் இருக்காது.இதை பார்க்காமல் திமுக வின் வேலை பிரதமரை மத்திய அரசை பேசி வாக்கு கேட்கும் பணியில் உள்ளனர்.

பாலக்காடு நெல்லிப்பதி என்ற இடத்தில் கேரள் அரசு தடுப்பணை கட்டுகிறது.சிறுவானி அணையின் உரிமைஉரிமையை விட்டுக்கொடுதாச்சு

இதேபோன்று பல ஆறுகளை திமுக கேரளாவிற்கு விட்டு கொடுத்துள்ளது.அடுத்த பத்து ஆண்டுகளில் இப்படி இருந்தால் கோவையில் தென் மாவட்டங்களை போல் தண்ணீர் பஞ்சம் தலைதூக்கும் .நட்பு வேண்டும் என்பதற்காக கொவை மக்களின் உரிமையை திமுக வஞ்சித்து கொண்டுள்ளது என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe