ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில் அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு…

published 1 year ago

ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில் அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு…

கோவை: தமிழக முதல்வரிடம் தங்களின் 7 அம்ச கோரிக்கையை ஆவணம் செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு தொழில் அமைப்பினர் (குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்) மனு அளித்தனர்.

"குடிசை மற்றும் குறு மின் நுகர்வோர்களுக்கு Tariff 3A(1) மின் இணைப்பு அளிக்க வேண்டும், தாழ்வழுத்த மின் கட்டணங்களுக்கு 0-12KW- 20ரூ, 0-50KW- 35ரூ, 50-112 KW- 35ரூ, 112-150KW- 350ரூ என்பது தொழில்துறையினரால் எதிர்பார்க்கப்படுகிறது, உயர் மின்னழுத்த பயன்பாட்டாளர்களுக்கான அதிகபட்ச கேட்பு கட்டணம் தற்பொழுது 562 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில் முந்தைய கட்டணமான 350 ரூபாய்க்கே குறைக்கப்பட வேண்டும், தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்களுக்கு பீக் அவர் கட்டணத்தை நீக்க வேண்டும் அதே சமயம் உயர் மின்னழுத்த பயனீட்டாளர்களுக்கு பீக் அவர் நேரம் நான்கு மணி நேரமாகவும் பீக் அவர் கட்டணம் 20% ஆகவும் குறைக்கப்பட வேண்டும், வருடாந்திர மின் கட்டண அதிகரிப்பு 1% இருக்க வேண்டும், சோலார் நெட்வொர்க்கிங் கட்டணம் நீக்கப்பட வேண்டும் மற்றும் நெட் மீட்டர் முறையில் அதிகப்படியாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் மின்சாரத்தை உபயோகிக்கும் மின்சாரத்திலிருந்து கழிக்கப்பட வேண்டும், 112-150KW உபயோகிக்கும் தொழிற்சாலைகள் தனியாரிடமிருந்து நேரடியாக மின்சாரம் வாங்கும் நடைமுறைக்கு அனுமதி அளிக்க வேண்டும்" ஆகிய 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இதனை முதல்வரின் கவனத்திற்கு ஆவணம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில் கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ஆகவே முதல்வர் தங்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இந்த ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அந்தந்த மாவட்ட தொழில் அமைப்புகள் முதல்வரின் கவனத்திற்கு இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருவதும் கோவையில் கதவடைப்பு போராடம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe