நான் எதற்கு அரசியல் பேச வேண்டும்..? கோவையில் மவுனமாய் கடந்த அண்ணாமலை..!

published 1 year ago

நான் எதற்கு அரசியல் பேச வேண்டும்..? கோவையில் மவுனமாய் கடந்த அண்ணாமலை..!

கோவை: பாரதப் பிரதமரின் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் இன்று பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் ஒரு மணி நேரம் தூய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை கோவில்பாளையம் அடுத்த எஸ் எஸ் குளம் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டார். கையில் கடப்பாரை பிடித்து குழி தோண்டி மரக்கன்றுகளை நடவு செய்த அண்ணாமலை, அங்கிருந்த  நூற்றுக்கும் மேற்பட்டோருடன் இணைந்து தூய்மை பணியிலும் ஈடுபட்டார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று நாடு முழுவதும் அனைவரும் தூய்மை பணியில் ஈடுபட வேண்டும் எனவும் இதை தொடர்ந்து கதர் ஆடைகளை வாங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். நான்காயிரம் கோடி என இருந்த காதி விற்பனை கடந்த 9 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடியை தாண்டி விட்டதாகவும் எனவே உள்ளூர் உற்பத்தி ஆடைகளை மக்கள் விரும்பி அணிய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். இந்த ஒரு மணி நேரம் எந்த புகைப்படமும் செல்ஃபியும் இல்லாமல் அனைவரும் பணி மேற்கொள்ள வேண்டும் என கூறினார். அவரிடம் டெல்லி பயணம் குறித்தான கேள்விக்கு  உங்கள் டிஆர்பி ஏற்றுவதற்கு நான் எதற்கு அரசியல் பேச வேண்டும் கூறி சென்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe