சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குட்டி காவலன் பாடத்திட்ட கையேடு வெளியீடு-உள்துறை முதன்மை செயலாளர் அமுதா வெளியிட்டார்...

published 1 year ago

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குட்டி காவலன் பாடத்திட்ட கையேடு வெளியீடு-உள்துறை முதன்மை செயலாளர் அமுதா வெளியிட்டார்...

கோவை: உயிர் அமைப்பு சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆர் எஸ் புரம் மாநகராட்சி கலையரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குட்டி காவலன் பாடத்திட்ட கையேட்டை
உள்துறை முதன்மை செயலாளர் அமுதா வெளியிட்டார். 
கோவையில் ஏற்படும் சாலை விபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகம்,  மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குட்டி காவலன் என்ற திட்டத்தின் ஆசிரியர்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு, ஹெல்மெட் அணிவதன் அவசியம், விபத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டு விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக உயிர் அமைப்பு சார்பில் குட்டி காவலன் பாடத்திட்ட கையேடு வெளியிடும் நிகழ்ச்சி மாநகராட்சி கலையரங்கில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மை செயலர் அமுதா கலந்துகொண்டு குட்டி காவலன் பாடத்திட்ட கையேட்டை வெளியிட்டார்.

 அப்போது அவர் பேசியதாவது:-
வாகன ஓட்டிகளின் அலட்சியப்போக்கால் பெரும்பாலான சாலை விபத்துகள் நடைபெறுகிறது.  ஓட்டுநர்களின் கவனக்குறைவால்  90 சதவீதம் விபத்துக்கள் நடைபெறுகிறது. போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டியவை குறித்து குழந்தைகள் தங்களது வீடுகளில் கொண்டு செல்வதற்கே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. குழந்தைகள், ஆசிரியர்கள் மூலமாக தான் சாலை பாதுகாப்பு குறிப்பு விழிப்புணர்வு எர்ப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். தமிழ்நாட்டில் 100 சாலை விபத்துகளில் 25 பேர் இறக்கிறார்கள் என்றால், கோவையில் 100 சாலை விபத்துகளில் 30 பேர் உயிரிழக்கின்றனர்.   
தலைக்கவசம் அணியாததல், காரில் சீட் பெல்ட் அணியாதது, இவைகள் தான் விபத்துக்கு முக்கிய காரணம். எனவே அனைவரும் சாலை விதிமுறைகளை கடைபிடித்து விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்க வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார். 
 

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி,  மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப், டிஐஜி சரவண சுந்தர், எஸ்பி பத்ரி நாராயணன், கோவை மண்டல இணை போக்குவரத்து கமிஷனர் சிவகுமார், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, உயிர் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ராஜசேகரன், உயிர் அமைப்பு தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, ஸ்ரீ கிருஷ்ணா  கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி  மற்றும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள், ஆசிரியர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe