ரேசன் கடைகளில் விரைவில் கண் கருவிழி சரிபார்ப்பு முறை

published 2 years ago

ரேசன் கடைகளில் விரைவில் கண் கருவிழி சரிபார்ப்பு முறை

ரேசன் கடைகளில் விரைவில் கண் கருவிழி சரிபார்ப்பு முறை
கோவை, ஜூன் 18: கோவை மாவட்டத்தில் ரேசன் கடையில் பொருட்கள் வாங்க பயோமெட்ரிக் கருவி மூலம் கைரேகை பெறப்பட்டு அதன் பின் பொருட்கள் வழங்கப்படுகிறது. அடிக்கடி நடக்கும் சர்வர் கோளாறு காரணமாக கைரேகை பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கைரேகை பெறுவதில் சிக்கல் உள்ளவர்களுக்கு கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்களை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,419 ரேசன் கடைகள் உள்ளன. இந்த ரேசன் கடைகளில் பயோ மெட்ரிக் கருவி மூலம் கைரேகை பெறப்பட்டு அதன் பின் பொருட்கள் வழங்கப்படுகின்றன. தற்போது ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது ஒவ்வொரு முறையும் கைரேகை பதிவு பெறப்படுகிறது. இந்த கருவிகளில் இணையதள வேகம் குறைவாக உள்ளது. மேலும் தொழில்நுட்ப கோளாறும் அடிக்கடி ஏற்படுகிறது. மேலும் வயது மூப்பின் காரணமாகவும் கைரேகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் கைரேகையை பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்படுவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்களை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் இந்த முறை செயல்படுத்துவது தொடர்பாக களஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. விரைவில் கைரேகை பதிவு செய்ய முடியாதவர்கள் கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்களை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe