எந்த நேரத்திலும் அழைக்கலாம்.. உழைக்க தயார்.. கோவை மாநகராட்சியின் புதிய ஆணையர் பேட்டி

published 1 year ago

எந்த நேரத்திலும் அழைக்கலாம்.. உழைக்க தயார்.. கோவை மாநகராட்சியின் புதிய ஆணையர் பேட்டி

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளராக சிவகுரு பிரபாகரன் பதவி ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:

எனக்கு இரண்டு வருடம் மாநகராட்சி பணிகளில் அனுபவம் உள்ளது. 

சென்னையில் வெள்ளதடுப்பு பணிகள், மாநகராட்சி பணிகளின் போது பல்வேறு அதிகாரிகளும் எனக்கு எப்படி பணி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். 

பொதுமக்களுடைய கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் துரிதமாக செயல்படுத்துவேன்.

கோவையில் முக்கிய பணிகளான பாதாள சாக்கடை, சாலை மேம்படுத்துவதை மேற்கொள்வேன். 

தன்னார்வலர்களுடன் இணைந்து கோவை மாநகராட்சி பணிகளை துரிதப்படுத்துவேன். கோவை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுடைய பிரச்சனை என்பதை கேட்டறிந்து அதை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பதை சக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து அதற்கு உரிய தீர்வை ஏற்படுத்துவேன். 

கோவை மாநகராட்சியில் எந்த பணிகள் என்றாலும் எப்பொழுது வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொதுமக்களில் முதல் மனுவாக டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அறக்கட்டளை சார்பாக கோவை மாநகராட்சியில் உள்ள நூறு வார்டுகளிலும் விதவைகள் முதியவர்கள், திருநங்கைகள் போன்றவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக ஒவ்வொரு வார்டிலும் புகார் மனு பெறக்கூடிய பெட்டியை வைக்க வேண்டும் என்ற மனுவை  செல்வராஜ்  கொடுத்துள்ளார். 

இதை மாநகராட்சி ஆணையாளர் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe