கோவை நீதிமன்றம் முன்பு இளம் பெண்கள் மோதல் - வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு

published 1 year ago

கோவை நீதிமன்றம் முன்பு இளம் பெண்கள் மோதல் - வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு

கோவை: கோவை நீதிமன்றம் முன்பு இளம் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சிந்து (26). இவருக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரூர் மாவட்டம் நல்லிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் பார்த்திபன் என்பவர் அறிமுகமானார். இவர் தனது மனைவி உமாவை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருவதாகவும், தன்னை மனைவி மிரட்டி பணம் பறித்து வருவதாகவும் சிந்துவிடம் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் சிந்துவை சந்தித்த உமா கணவரை மிரட்டி பணம் பறிக்க கூறியதாகவும், அதற்கு சிந்து மறுத்ததால் உமா ரவுடிகளை சிந்துவின் வீட்டிற்கு அனுப்பி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று சிந்துவும் திரைப்பட தயாரிப்பாளர் பார்த்திபனும் கோவை கோர்ட்டின் பின்பக்க வாசல் அருகே உள்ள வக்கீல் ஒருவரை சந்திப்பதற்காக சென்றனர். அந்த சமயத்தில் முகத்தில் மாஸ்க் அணிந்து வந்த உமா திடீரென பார்த்திபன் பைக் சாவியை பறித்துள்ளார்.

உடனே சிந்து இது குறித்து உமாவிடம் கேள்வி எழுப்பினார்.அப்போது இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொண்டனர். இரண்டு பெண்கள் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதால் அங்கு ஏராளமானோர் குவிந்தனர். இது குறித்த தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

போலீசார் முன்னிலையிலேயே இருவரும் சண்டையிட்டுக்கொண்டனர். தொடர்ந்து இருவரையும் சமாதானப்படுத்திய போலீசார் ரேஸ்கோர்ஸ் போலீஸ்  நிலையம் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து இருவரிடமும் புகார்கள் பெற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு பெண்கள் ஒருவருக்கொருவர் பொதுமக்கள் முன்னிலையில் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

பெண்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ காட்சிகள் : https://www.youtube.com/watch?v=QGtZC7se-x4

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe