நேரு உள்விளையாட்டு அரங்கை ஆய்வு செய்த விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலர்…

published 1 year ago

நேரு உள்விளையாட்டு அரங்கை ஆய்வு செய்த விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலர்…

கோவை: கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் 6.67 கோடி மதிப்பில் தடகள ஓடுதளப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை சில மாதங்களுக்கு முன்பு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளபட்டு வந்த நிலையில், தற்போது அந்த தடகள ஓடுதளப்பாதையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத் ரெட்டி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து உள்விளையாட்டரங்கில் தங்கி பயின்று வரும் தமிழ்நாடு விளையாட்டு மாணவர்களுடன் பேசிய அவர் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார், கோவை தடகள சங்க பொருளாளர் ஜான் சிங்கராயர் ஆகியோர் உடனிருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe