ஆயுத பூஜை : நம்ம பூ மார்க்கெட்டில் பூக்கள், பழங்கள் விலை என்ன..? முழு விவரம்

published 1 year ago

ஆயுத பூஜை : நம்ம பூ மார்க்கெட்டில் பூக்கள், பழங்கள் விலை என்ன..? முழு விவரம்

தொடர் பண்டிகை தினங்களை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

தமிழகத்தில் 23 மற்றும் 24ம் தேதி ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை தினத்தில் பொதுமக்கள் தங்களது தொழிலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், பைக் கார் உள்ளிட்ட வாகனங்கள், புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு மாலை அணிவித்து பூஜித்து வழிபடுவது வழக்கம்.

பண்டிகை தினம் நெருங்கியுள்ள சூழலில் கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன. சேலம், நாமக்கல், தர்மபுரி, ராயக்கோட்டை, ஓசூர் மற்றும் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து செவ்வந்தி பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் கேரள வியாபாரிகளும் வந்து இங்கு பூக்களை வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் ஐயப்பன் கூறியதாவது:

இந்தாண்டு செவ்வந்திப் பூ நல்ல விளைச்சல் உள்ளது. செவ்வந்தி சராசரியாக ரூ.200 என்ற விலைக்கு விற்பனை செய்தால் தான் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். இது பொதுமக்களுக்கும் இந்த விலையால் பாதிப்பு இருக்காது. தற்போதைய சூழலில் கோவை பூ மார்க்கெட்டில் செவ்வந்தி பூ தற்போது ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், கோழிக்கொண்டை ரூ.60 முதல் ரூ.100க்கும், செண்டு மல்லி ரூ.60 முதல் ரூ.70க்கும், சம்பங்கி ரூ.200க்கும் விற்பனையாகிறது. அரளி ரூ.300 முதல் ரூ.400க்கும், மல்லி ரூ.800 வரையும், முல்லை ரூ.400 முதல் 600 வரையும் விற்பனை செய்யப்படு வருகிறது. வழக்கமாக இந்த பண்டிகையின் போது பூ மார்க்கெட்டுக்கு ஒரு நாளைக்கு 400 முதல் 500 டன் பூக்கள் வரும். தற்போது 250 டன் பூக்கள் விற்பனைக்கு வருகின்றது.

இவ்வாறு ஐயப்பன் கூறினார்.

பழ வியாபாரி கோவிந்தராஜ் கூறியதாவது:

ஒரு கிலோ ஆப்பிள் ரூ.160 முதல் ரூ.180 வரையும், ஆரஞ்சு ரூ.70 முதல் ரூ.80 வரையும், மாதுளை ரூ.200 முதல் ரூ.240 வரையும், திராட்சை ரூ.120 முதல் ரூ.140 வரையும் , சாத்துக்குடி ரூ.70 முதல் ரூ.80 வரையும், கரும்பு ஜோடி ரூ.150க்கும், வாழை மரம் ஜோடி ரூ.40க்கும், வெள்ளை பூசனி கிலோ ரூ.30க்கும் விற்பனை செய்யப்படு வருகிறது. என்றார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe