தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை கேள்விக்குறியாக உள்ளது- தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன்…

published 1 year ago

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை கேள்விக்குறியாக உள்ளது- தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன்…

கோவை: தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை கேள்விக்குறியாக உள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் ராஜ் பவனில் நடந்த பெட்ரோல் குண்டு வெடிப்பு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியானதற்கு எடுத்துக்காட்டு எனவும்
சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்றும் கூறினார். இந்த செயல் தமிழகத்தின் உளவுத்துறை செயல்படாமல் இருப்பதை காட்டுவதாகவும்
ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகைக்கும் பாதுகாப்பு தேவையாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும்
நீட் தேர்வை வைத்து கல்வியில் அரசியலை திமுக புகுத்த நினைக்கிறது என்றும்
திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe