கொடிகம்பத்தில் கொடியேற்றுவதற்காக அனுமதியின்றி கூடிய பாஜகவினர் காவல்துறையினரால் கைது...

published 1 year ago

கொடிகம்பத்தில் கொடியேற்றுவதற்காக அனுமதியின்றி கூடிய பாஜகவினர் காவல்துறையினரால் கைது...

கோவை

கொடிகம்பத்தில் கொடியேற்றுவதற்காக அனுமதியின்றி கூடிய பாஜகவினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீட்டின் அருகே இருந்த பாஜக கொடிக்கம்பம் காவல்துறையினரால் சில தினங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. அச்சம்பவம் பாஜகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்து. அந்நிலையில், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கி 100 நாட்களுக்குள் தமிழகத்தில் 10,000 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்பட்டு பாஜக கொடி ஏற்றப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். அதன்படி  நவம்பர் ஒன்றாம் தேதியான இன்று கோவை மசக்காளிப்பாளையம் பகுதியில் கோவை மாவட்ட பாஜகவினர், மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி ஆகியோர் முன்னிலையில் ஏற்கனவே அப்பகுதியில் இருந்த பாஜககொடி கம்பத்தில் கொடி ஏற்றுவதற்காக கூடியுள்ளனர். அவர்கள் அனுமதி இன்றி கூடியதாக கூறப்படும் நிலையில் அங்கு வந்த காவல் துறையினர் அனுமதியின்றி கூடியதால் கைது செய்தனர்.

காவல்துறையினரின் இந்த நடவடிக்கை கண்டனத்திற்கு உரியது என கூறிய பாஜக கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, இதே நிலை தொடர்ந்தால் தங்களது ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் மக்கள் புரட்சியாக வெடிக்கும் என தெரிவித்தார்.

இதில் சுமார் 40க்கும் மேற்பட்ட பாஜக வினர் கைது செய்யப்பட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe