கோவையில் திமுக பிரமுகரின் இல்லம் உட்பட 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை...

published 1 year ago

கோவையில் திமுக பிரமுகரின் இல்லம் உட்பட 5 இடங்களில்  வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை...

கோவை: தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, திருவண்ணாமலை பகுதியிகளில் காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் காலை முதல் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

இதில் திருவண்ணாமலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான வீடு கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினை சோதனையிட்டு வருகின்றனர். 
இதன் ஒரு பகுதியாக கோவையிலும் அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம்- நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மூன்று கார்களில் வந்துள்ள அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல அதே பகுதியில் பார்சன் என்ற அபார்ட்மெண்ட்டில் உள்ள மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீ ராமின் வீடு மற்றும் சிங்காநல்லூர் பகுதியில் திமுக பிரமுகரும், முன்னாள் கவுன்சிலருமான எஸ்.எம்.சாமி ஆகியோரின் வீடுகளிலும் இந்த சோதனை நடந்து வருகிறது. மீனா ஜெயக்குமார் அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினர் என்ற முறையில் இந்த வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. இவரது கணவர் ஜெயக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கோவையில் மட்டும் மீனா ஜெயக்குமார் இல்லம் உட்பட  5 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  

மீனா ஜெயக்குமார் அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினர் என கூறப்படும் நிலையில் சோதனை நடைபெற்று வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe