Part Time வேலை என்று குறுஞ்செய்தி வருகிறதா.. உஷார்..!

published 1 year ago

Part Time வேலை என்று குறுஞ்செய்தி வருகிறதா.. உஷார்..!

கோவை: கோவையை சேர்ந்த இன்ஜினியரிடம் டெலிகிராம் ஆப் மூலம் பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாக ரூ.14.5 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை கணபதி, லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் தர்மராஜ், 33. இவர் கீரணத்தத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரது மொபைல் போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை வாய்ப்பு குறித்த மெசேஜ் வந்தது.

அதை தொடர்ந்து தர்மராஜ் அதில் குறிப்பிடப்பட்டு இருந்த டெலிகிராம் ஆப் மூலம் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டார். அப்போது அந்த நிறுவனத்தில் இருந்து பகுதி நேர வேலை வாய்ப்பு மூலம் கூடுதலாக வருமானம் பெறலாம் என்பதற்குரிய ஆதாரங்களை அனுப்பி வைத்தனர்.

மேலும் சிறிய அளவு முதலீடு செய்யுமாறு, 12 வங்கி கணக்குகளை அந்த நிறுவனத்தில் இருந்து தர்மராஜுக்கு அனுப்பி வைத்தனர். இதை நம்பிய தர்மராஜ் ரூ.8.88 லட்சத்தை  அனுப்பி வைத்தார். தொடர்ந்து அந்த நிறுவனத்தில் இருந்து ரூ.18.75 லட்சம் தர இருப்பதாகவும், அதற்கு, 30 சதவீதம் வரியாக ரூ.5.62 லட்சம் செலுத்துமாறு கூறியுள்ளனர்.

அந்த பணத்தையும் தர்மராஜ், அவர்கள் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். அதன் பின் அவருக்கு எந்த பணமும் வரவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திருப்பி பெற முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தர்மராஜ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாக சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் பல்வேறு குறுஞ்செய்திகள் வலம் வருகின்றன. இதன் உண்மைத்தன்மையை ஆராயமல் யாரும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்.. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe