முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறவினர்கள் என கூறி நாமக்கல்லில் ரூ.5 கோடி நிலம் மோசடி கோவை ஐஜி அலுவலகத்தில் பரபரப்பு புகார்…

published 1 year ago

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறவினர்கள் என கூறி நாமக்கல்லில் ரூ.5 கோடி நிலம் மோசடி கோவை ஐஜி அலுவலகத்தில் பரபரப்பு புகார்…

கோவை: திருச்செங்கோடு ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து இன்று 20க்கும் மேற்பட்டோர் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஐஜி அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் எனக் கூறி ரூ.5  கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக புகார் மனு அளித்தனர். 

அந்த புகாரில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கடந்த 2012-ம் ஆண்டு குப்பிச்சிபாளையம் மரப்பரை கிராமத்தில் மோகனசுந்தரம் மற்றும் மணி ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனர்கள் சபாநாயகம், சந்திரகாந்த் மணிக்கவுண்டர் ஆகியோர் தில்லை நகர் என்ற பெயரில் வீட்டு மனை விற்பதாக விளம்பரம் செய்தனர். இதனை நம்பி சேலம் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 86 க்கும் மேற்பட்டோர் பணம் முதலீடு செய்தோம். நிலம் வாங்கியவர்களில் சிலர் வீடு கட்ட முயன்ற போது வாங்கிய நிலங்கள் அனைத்தும் அனுமதிற்ற மனை பிரிவுகள் என்பது தெரியவந்தது. 2017ம் ஆண்டு அனுமதியற்ற மனை பிரிவுகளை ஒழுங்குபடுத்துவதற்காக அரசாங்கம் ஆணை பிறப்பித்தது. இதனால் எங்களுடைய மனைகளை வரைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தபோது இந்த நிலங்களுக்கு எந்த விதமான அரசு சார்ந்த நடவடிக்கையும் எடுக்காமல் மணி கவுண்டர் மருமகன் சந்திரகாந்த், சபாநாயகம், சங்கர் பத்மபிரியா, சிவா ஆகியோர் கூட்டு சேர்ந்து சுமார் ரூ. 5 கோடி மதிப்பிலான நிலத்தை போலியான வரைபடம் தயாரித்து நிலம் வாங்கி எங்களை ஏமாற்றி மோசடி செய்தது தெரிய வந்தது. மணி கவுண்டர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் என்பதால் போலீசார் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் தயக்கம் காட்டி வருகின்றனர். இது குறித்து பலமுறை நாங்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். 
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe