அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

published 2 years ago

அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/BAXr3lCHLQq5ShW9FLGZmG

கோவை, ஜூன் 21-

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மற்றும் புல்டோசர் பாசிசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் ஜோதிகுமார் தலைமை தாங்கினார். 

மாவட்ட தலைவர் மாசேதுங், செயலாளர் கோபால் சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டம் குறித்து வக்கீல்கள் கூறியதாவது:- ஆபத்தான சூழலில் இருந்து இந்திய நாட்டை பாதுகாக்கும் உச்சபட்ச கடமையை ஆற்றுவோர் இராணுவ வீரர்களே. அந்த பணியிலும் கூட 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கூலி ஆட்களை எடுக்கத் துணிந்து இருக்கிறது ஒன்றிய அரசாங்கம். இது மிகப்பெரிய மோசடி ஆகும். 

ஓய்வூதியம் பணி பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுத்து நிரந்தரமற்ற சூழலில் 4 ஆண்டுகளுக்குப்பின் கைவிடப்படும் வீரர்களின் நிலைமை என்ன ஆகும். ராணுவ வீரர்களுக்கு இதுதான் நிலை என்றால் மற்ற பல துறைகளிலும் இதைவிட மோசமான நிலை ஏற்படுத்தப்படும். இந்த அக்னிபாத் திட்டத்தை எதிர்ப்பது மகத்தான தேசபக்த கடமை. இளம் வயதினரை ஆர்எஸ்எஸ் சின் ஊழியர்களாக மாற்றி ராணுவ ஆட்சியை நிறுவ முயற்சிக்கும் திட்டமாகும்.

இந்தியா முழுவதும் தங்களது வாழ்வியல் உரிமைக்காக போராடும் சிறுபான்மை மக்களின் வாழ்விடங்களை புல்டோசர் கொண்டு அரசியலமைப்பு சட்ட மாண்புகளைக் குழிதோண்டி புதைக்கும் ஒன்றிய அரசை கண்டிக்கிறோம்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புல்டோசர் பாசிசத்தை கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் 100க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe