தொழில்நுட்ப ஜவுளிக் கருத்தரங்கில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு...

published 1 year ago

தொழில்நுட்ப ஜவுளிக் கருத்தரங்கில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு...

கோவை: கோவையில் 17ம் தேதி நடைபெற உள்ள தொழில்நுட்ப ஜவுளிக் கருத்தரங்கில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவின் துணிநூல் மற்றும் ஆயத்த ஆடைகள் சந்தையில் தொழில்நுட்ப ஜவுளிகள் 13 சதவீதம் பங்களிப்பு வழங்குகின்றன. தொழில்நுட்ப ஜவுளித்துறைப்ஆண்டிற்கு 12 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடையும் என்றும், 2030 ஆம் ஆண்டிற்குள் சந்தை மதிப்பில் 45 பில்லியன் அமெரிக்கா டாலர் அமளவிற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நமது நாட்டில் தொழில்நுட்ப ஜவுளித்துறை நேரடியாக 12 இலட்சம் நபர்களுக்கும், மறைமுகமாக 50இலட்சம் நபர்களுக்கும் வேலைவாய்ப்பினை வழங்கி வருகிறது.

இந்தியதொழில் கூட்டமைப்(CII) மூலமாக வருகிற 17.11.2023 அன்று கோயம்புத்தூரில் உள்ள ஹோட்டல் லீ மெரிடியனில், தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை ஒன்றிய அரசின் ஜவுளித் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு(CII) ஆகியவை இணைந்து தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கம் நடத்த உள்ளன. மேற்படி கருத்தரங்கில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வல்லுநர்கள் தொழில்நுட்ப ஜவுளி துறையில் உள்ள வாய்ப்புகள் வளர்ச்சி. புதிய முதலீடுகள். பன்னாட்டு சந்தை மற்றும் அதனுடைய போக்கு குறித்து கலந்துரையாடல் நடைபெற இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளுவதற்கு இணையதள உள்ளது. முன்பதிவு செய்வதற்கான இணைப்பு (https://bit.ly/CIITechnicalTextiles). மேற்படி கருத்தரங்கில் ஜவுளிதொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, மண்டல துணை இயக்குநர் திரு.சு.இராகவன்- 9443570745
மண்டல துணை இயக்குநர் அலுவலகம், அறை எண்.502, ஐந்தாவது தளம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம்.
திருப்பூர்-641804.

மின்னஞ்சல்: [email protected]

தொலைபேசி எண்: 0421 2220035.

9442186070, 9750160503

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe