தீயணைப்பான் கருவியை எப்படி பயன்படுத்தி வேண்டும்..? செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத்துறை

published 1 year ago

தீயணைப்பான் கருவியை எப்படி பயன்படுத்தி வேண்டும்..? செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத்துறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழக தீயணைப்புத்துறை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளிலுக்கு செல்லும் தீயணைப்புத்துறையினர் அங்கு மாணவர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகையை செய்து காண்பித்து வருகின்றனர்.

அந்த வகையில் கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் தீயணைப்பான் கருவியை எப்படி உபயோகிப்பது என்பது குறித்த செயல்முறை விளக்கம் மாணவர்கள் மத்தியில் செய்து காண்பிக்கப்பட்டது.

இதுகுறித்து பீளமேடு தீயணைப்புத்துறை அலுவலர் ரவிக்குமார் மாணவர்கள் மத்தியில் கூறியதாவது:

தீயணைப்பான் இயந்திரம் கொண்டு பேப்பர், சக்கு, பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்களில் தீ பிடித்தால் தீயணைப்பு கருவியைக் கொண்டு தீயை அணைக்கலாம். முதலில் அலுவலகம் அல்லது வீட்டில் இருக்கும் தீயணைப்பானை எடுத்து அதில் இருக்கும் பாதுகாப்பு கம்பியை (Safety clip) அகற்ற வேண்டும். தொடர்ந்து தீ பிடித்திருக்கும் இடத்தை நோக்கி தீயணைப்பானில் பொருத்தப்பட்டிருக்கும் குழாயை வைக்க வேண்டும். இதன் பிறகு தீயணைப்பான் கருவியை தூக்கிப்பிடித்தவாறு ட்ரிக்கரை அழுத்தி தீயை அணைக்க வேண்டும். இது தான் தீயணைப்பானை உபயோகிக்கும் முறை.

இவ்வாறு ரவிக்குமார் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe