தீபாவளிக்கு கோவையில் மது விற்பனை எத்தனை கோடி தெரியுமா?

published 1 year ago

தீபாவளிக்கு கோவையில் மது விற்பனை எத்தனை கோடி தெரியுமா?

கோவை: தீபாவளி பண்டிகை முன்னிட்டு கோவை மண்டலத்தில் நேற்று 39.61 கோடிக்கு மது பாட்டில் விற்பனையானது.

இரண்டு நாளில் ரூ. 79.81 கோடிக்கு விற்பனையானது.

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர் ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கியது கோவை மண்டலம். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கோவை தெற்கு மற்றும் வடக்கில் 284 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை அதிகரித்துள்ளது. மது பிரியர்கள் பீர், பிராந்தி, விஸ்கி, ரம் உள்ளிட்ட மது பான வகைகளை அதிக அளவில் வாங்கி சென்றனர்.

கோவை மண்டலத்தில் நேற்று முன்தினம் ஒரு 40.20 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. இந்த விற்பனை நேற்று சற்று குறைந்து ரூ.39.21 கோடிக்கு விற்பனையானது.

கோவை மண்டலத்தில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட நேற்று முன்தினம் வெளியூர் சென்றதால் நேற்று டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை முந்தைய நாளை விட ரூ.1 கோடி வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe