கார்த்திகை மாதம் முதல் நாளை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து வருகின்றனர்…

published 1 year ago

கார்த்திகை மாதம் முதல் நாளை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து வருகின்றனர்…

கோவை: கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதியான இன்று ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் நாடு முழுவதும் மாலை அணிந்து தங்களுடைய மண்டல பூஜைகளுக்கான விரதம் மேற்கொள்ள உள்ளனர்.

கார்த்திகை முதல் நாளான இன்று அதிகாலை எழுந்து குளித்து ஆலயத்தில் குரு மார்கள் மூலமாக துளசிமணி மாலை அணிந்து தங்களுடைய விரதத்தை துவக்குகின்றனர்.   மாலை அணிந்து மண்டல பூஜைகளின் கடைசி பூஜையான படி பூஜை நடைபெற உள்ள கால இடைவெளியான இரண்டு மண்டலங்கள் நோன்பிருந்து சபரிமலை செல்வது வழக்கம். அவர்களும் தங்கள் குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் மேற்கொண்டு மாலை அணிந்து தங்களுடைய நோன்பை துவங்குவர்.  

அதன்படி கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில் கோவில் நிர்வாகத்தின் சார்பாக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு மாலை அணியும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. காலை முதல் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிந்து மாலை அணிந்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe