அரசு துறைகள், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கான திட்ட விளக்கக் கூட்டம்- மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு…

published 1 year ago

அரசு துறைகள், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கான திட்ட விளக்கக் கூட்டம்-  மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு…

கோவை: கோவை, பாப்பநாயக்கன் பாளையம் கிராண்ட் ரீஜண்ட்டில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் உரிமைகள் திட்டம் தொடர்பாக அரசு துறைகள், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கான திட்ட விளக்கக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார்  தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரக உதவி தனி அலுவலர் மைதிலி, உரிமைகள் திட்டத்தின் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரக திட்ட மேலாளர்கள் தேவகுமார், ராஜராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் மாவட்ட திட்ட மேலாளர் சுந்தரேஷ்வரன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் வீடுகளுக்கு பயனாளிகளின் பங்கு தொகையாக 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 36,000 ரூபாய் காசோலையினை Thalanar Agro தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர்  வழங்கினார். மேலும் அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe