மாட்டுவண்டியில் 'ட்ரிப்' அடித்த கோவையின் பொண்ணு - மாப்பிள்ளை..! - வைரல் VIDEO…

published 1 year ago

மாட்டுவண்டியில் 'ட்ரிப்' அடித்த கோவையின் பொண்ணு - மாப்பிள்ளை..! - வைரல் VIDEO…

கோவை: திருமணம் முடிந்தவுடன் கோவையைச் சேர்ந்த புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் பயணம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு முன்பும், பின்னும் புதுமணத்தம்பதிகள் வித விதமாக போட்டோ ஷூட் செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அதில் சில புகைப்படங்கள் ட்ரெண்டாகி விடுகின்றன.

இதனிடையே கோவையைச் சேர்ந்த புதுமணத்தம்பதிகள் திருமணம் முடிந்தவுடன் மாட்டுவண்டியில் பயணம் செய்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

கோவையை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் பவுதாரணி ஆகிய இருவருக்கும் ஈச்சனாரி விநாயகர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. கோவிலில் திருமண சடங்குகளை முடித்த பின்னர் தம்பதியினர் மாட்டு வண்டியில் செல்ல முடிவு செய்தனர். அதன்படி ஈச்சனாரியில் இருந்து செட்டிபாளையத்தில் உள்ள ஆனந்த் வீட்டுக்கு இருவரும் மாட்டு வண்டியில் பயணம் செய்தனர்.

மணக்கோலத்தில் மாட்டு வண்டியில் சென்ற புதுமண தம்பதியினர் செல்வதைப் பார்த்த பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். பலரும் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். இந்த வீடியோ தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

வீடியோவை காண லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/PxKM_cG35uA

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe