நீலகிரி மலை ரயில் ரத்து

published 1 year ago

நீலகிரி மலை ரயில் ரத்து

கோவை: குன்னூரில்  இடியுடன் கன மழை  பெய்ததால்   கல்லாரில் இருந்து ரன்னிமேடு பகுதிக்கு இடையேயான ஹில்குரோ என்னும் இடத்தில்  தண்டவாளத்தில் பாறை மற்றும் மண் சரிவு ஏற்பட்டதால் இன்று  மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக இரயில்வே நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

நேற்று பெய்த கன மழை காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மண் சரிவு மரங்கள் விழுந்து மலை ரயில் சேவை இன்று   ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக  மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து மழை பெய்ய வருவதால் மலை ரயில் பாதையில் எந்த நேரமும் மண் சரிவு மரங்கள் விழும் என்பதால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்கை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது..

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe