நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு- முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி நேரில் ஆய்வு...

published 1 year ago

நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு- முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி நேரில் ஆய்வு...

கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் அவ்வப்போது மழைபெய்து வந்துகொண்டு இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கோவையில் இரவு நேரங்களில் கனமழை பெய்துவருகிறது. மேலும் கோவை நொய்யல் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவு மழை பெய்துவருவதால் தற்பொழுது நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்னம்மநல்லூர் பகுதியில் உள்ள நொய்யலாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுறண்டு ஓடுகிறது.

இதை முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டார். மேலும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளையும் பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe