கோவையின் முக்கிய தேவாலயங்கள்: ஒரு பார்வை

published 2 years ago

கோவையின் முக்கிய தேவாலயங்கள்: ஒரு பார்வை

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/HnNiEmYAweu4lUIbHWUht6

கோவையில் பிரசித்தி பெற்ற இந்து சமய கோவில்கள் இருப்பது போல், பல கட்டிடக்கலையில் சிறந்த தேவாலயங்களும் இருக்கின்றன. இங்குள்ள பெரும்பாலான தேவாலயங்கள் கத்தோலியர்களைச் சார்ந்தது. நீங்கள்  கட்டிடக்கலையை ரசிப்பவராக இருந்தாலும் சரி அல்லது ஆன்மீகத்தைத் தேடுபவராக இருந்தாலும் சரி, இந்த தேவாலயங்களை நீங்கள் கண்டிப்பாக விரும்புவீர்கள்.

ஆர் லேடி ஆஃப் பாத்திமா சர்ச்


இந்த தேவாலயம் மிகவும் பழமையானது. ஜனவரி 1955-ல் செயின்ட் மேரிஸ் ஆரம்பப் பள்ளியில் சகோதரர் பீட்டர் டாமியன் என்பவரால் துவக்கிவைக்கப்பட்டு, டிசம்பர் 23, 1962 அன்று ஆசீர்வதிக்கப்பட்டது. கோவையில் உள்ள சிறந்த கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்றான இது, காந்திபுரம் அருகே அமைந்துள்ளது.

புனித அந்தோணியார் தேவாலயம்


புலியகுளத்தில் அமைந்துள்ள இந்த தேவாலயம் பிரதான நகரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த தேவாலயம் 1859-ம் ஆண்டு ஃபாதெர் டி கெலிஸ் என்பவரால் கட்டப்பட்டது. 1892-ல் புதுப்பிக்கப்பட்ட இந்த தேவாலயத்தில் செவ்வாய் கிழமைகளில் நடைபெறும் ஹோலி மாஸிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றன. காலை 6 மணி, 11 மணி, 11:30 மணி மற்றும் மாலை 6 மணி ஆகிய நேரங்களில் இங்கு மாஸ் நடைபெறுகிறது. இங்கு நடத்தப்படும் 'யூத் ஃபெஸ்டிவல்' மிகவும் பிரபலம்.

சிஎஸ்ஐ ஆல் சோல்ஸ் சர்ச்


கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவத்தினரால் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் உருவாக்கப்பட்ட சில ஆங்கிலிக்கன் தேவாலயங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த தேவாலயத்தின் கைவினைத்திறன் மிகவும் தனித்துவமானது. தேவாலயமும் அதை ஒட்டிய கட்டிடமும் ஆங்கிலிகன் தேவாலயத்தின் சிறப்பியல்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த தேவாலயத்தின் கட்டிட கலையில் காணப்படும் கூரான வளைவுகள் கோதிக் கட்டிடக்கலை பாணியைப் பிரதிபலிக்கின்றன.

பெத்தேல் சிட்டி கதீட்ரல்


இந்த தேவாலயம் 1976-ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதிலுமிருந்து திரண்ட 50 நபர்களால், ஜெபத்தின் சக்தியைப் பரப்பும் நோக்கில் கட்டப்பட்டு,  இந்திய பெந்தேகோஸ்தே அசெம்பிளியைச் சேர்ந்த ஜாப் ஞானப்பிரகாசம் என்பவரால் நிருவப்பட்டது. இந்த தேவாலயம் 2008-ல் பெத்தேல் சிட்டி கதீட்ரல் என மறுபெயரிடப்பட்டது. இப்போது இது முற்றிலும் குளிரூட்டப்பட்டு, 3000 பேர் வரை தங்கக்கூடிய அதிநவீன வசதிகளைக் கொண்ட தேவாலயமாகும்.

CSI கிறைஸ்ட் சர்ச்


கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு. ஜான் சல்லிவன், வன அதிகாரி திரு. லூசிங்டன், ரெவரென்ட். கிட்டென்ஸ் மற்றும் சாப்ளின் ஆகியோரால் 1820-ல் இந்த தேவாலய கட்டிடத்திற்கான இடம் அடையாளம் காணப்பட்டு, 1898-ம் ஆண்டில், பிஷப் ஜெல் I-ல் அடித்தளம் அமைக்கபட்டது. கடவுளின் அருளாசியைத் தேடி வருவோர்க்கு மிக பிரசித்தியான இடம் இந்த தேவாலயம் எனக் கூறப்படுகிறது.

சீயோன் ஏஓஜி சர்ச்


"சீயோன்" என்ற வார்த்தைக்கு 'கோட்டை' என்று பொருள். இந்த தேவாலயம் மக்கள் கர்த்தராகிய இயேசுவிடம் ஜெபிப்போருக்கான புகலிடமாக உள்ளது. இது 1961-ம் ஆண்டு ஆங்கில மிஷனரிகளான ரெவரென்ட் & திருமதி லாரன்ஸ் லைவ்சே என்பவர்களால் நிறுவப்பட்டது. இந்த தேவாலயம் சர்ச் சாலையில் அமைந்துள்ளது. ஒரு சிலருடன் மட்டுமே தொடக்கப்பட்ட இந்த தேவாலயத்தில் இப்போது 1500-க்கும் மேற்பட்டோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

கிறைஸ்ட் தி கிங் சர்ச்


கோயம்புத்தூரில் உள்ள மிகவும் பிரபலமான தேவாலயங்களில், கிறைஸ்ட் தி கிங் தேவாலயம் மிகவும் பழமையான ஒன்றாகும். இந்த தேவாலயம் புதன்க்கிழமை மாலையில் நடைபெறும் "சகாய மாத நோவெனா (novena)" மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் "இறை இறக்கம் நோவெனா" முறை வழிபாடுகளுக்கு பிரசித்தி பெற்றது. புகைப்படம் எடுக்க விரும்புவோருக்கு இது ஒரு அழகிய தேவாலயமாகும்.

கோவையில் உள்ள இந்த தேவாலயங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள் என்று நம்புகிறோம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe