பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்...

published 1 year ago

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,  தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்...

கோவை:கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம்  முன்பு தொழில் சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கிட சட்டபூர்வ உத்தரவாதம் கொடுக்க வேண்டும், மின்சார திருத்த மசோதா 2022யை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் ஆக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில், LPF, INTUC, AITUC, HMS, CITU, MLF உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe