பிளாஸ்டி டேப்பில் சிக்கித்தவித்த நாகப்பாம்பு : பத்திரமாக மீட்ட வாலிபர் - வீடியோ..!

published 1 year ago

பிளாஸ்டி டேப்பில் சிக்கித்தவித்த நாகப்பாம்பு : பத்திரமாக மீட்ட வாலிபர் - வீடியோ..!

கோவை: கோவை போத்தனூர் ஈச்சனாரி சாலையில் தனியாருக்கு சொந்தமான டூல் பொறியியல் தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றன . இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் அட்டை பெட்டி பாக்ஸை எடுத்து அடுக்கி வந்த போது சுமார் 3 அடி நீள நாகப்பாம்பு ஒன்று அட்டை பெட்டியில் இருந்தது . நாக பாம்பு அட்டை பெட்டியில் டேப்பில் ஒட்டி தவித்தது. டேப்பில் ஒட்டிய பாம்பு தலை பகுதி சுருண்ட நிலையில் இருந்த போது  வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையிலுள்ள ம்பு பிடி வீரர் மோகன்குமாருக்கு தகவல் தந்தனர் .

பாம்பு பிடி வீரர் மோகன் அட்டை பெட்டியில் ஒட்டியிருந்த பாம்பை , பத்திரமாக பாம்பு பிடி பாதுகாப்பு உரை அணிந்து டேப்பிலிருந்து விடுவித்தார் . இதனால் டேப்பில் தலை சுற்றி நகர முடியாமல் போராடிய நாக பாம்பு, அதிலிருந்து விடுபட்டு வழக்கமான இயல்பு நிலைக்கு திரும்பியது. பின்னர் அதனை வன பகுதியில் பத்திரமாக விட்டனர்.

பாம்பை மீட்கும் வீடியோவை காண லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.youtube.com/watch?v=9amidd_nOc0

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe