ஜோஸ் அலுக்காஸ் கொள்ளை சம்பவம்- மாநகர காவல் ஆணையாளர் கூறிய பரபரப்பு தகவல்கள்...

published 1 year ago

ஜோஸ் அலுக்காஸ் கொள்ளை சம்பவம்- மாநகர காவல் ஆணையாளர் கூறிய பரபரப்பு தகவல்கள்...

கோவை: கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து தற்பொழுது வரை காவல்துறை மேற்கொண்ட விசாரணை குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது பேசிய அவர், ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் துணை ஆணையாளர்கள் சந்தீஷ், சண்முகம் ஆகியோர் தலைமையில் ஐந்து தனிப்படையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றசம்பவத்தில் ஈடுபட்டவர் விஜய் என கண்டறியப்பட்டுள்ளதாகவோ அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்தார். விஜயின் மனைவி நர்மதா இந்த கொள்ளை சம்பத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த காவல் ஆணையாளர், அவரது மனைவிக்கு இதில் பெரும் பங்கு உண்டு என தெரிவித்தார்.

வெள்ளி,தங்கம்,வைரம்  திருடப்பட்டதாக நகைக்கடை தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில்
கொள்ளடிக்கப்பட்ட நபர் விஜயின் மனைவியிடம் இருந்து மூன்று கிலோ நகை மீட்கப்பட்டுள்ளதாக கூறினார்.

விஜயை கைது செய்தால் மீதமுள்ள நகைகளும் மீட்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் விஜயின் மீது அரூர் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் இரண்டு திருட்டு வழக்குகள்  கோவை ஆர் எஸ் புரத்தில் ஒரு திருட்டு வழக்கு என மூன்று வழக்குகள்  உள்ளது எனவும் தெரிவித்தார். 
இந்த கொள்ளை சம்பத்துவிற்கு முழுக்க முழுக்க அவர் மனைவி நர்மதா காரணம் என்று. தடயவியல் தொழில்நுட்பங்களில் விசாரணை செய்து வருவதாக கூறினார்.

இந்த கொள்ளை சம்பவத்தில் நர்மதாவிற்கு பங்களிப்பு உள்ளது.
விஜய் மனைவி நர்மதா மீது எந்தவிதமான வழக்கும் தற்போது வரை இல்லை எனவும் இந்த வழக்கில் விஜய் நண்பர் சுரேஷ் மேற்கொண்டு வருவதாக கூறினார்.

கட்டிடம் வேலை நடைபெறுவதால் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு கடையில் உள்ள எச்சரிக்கையா அலாரத்தை துண்டித்து விட்டதாக கூறினார்.

கோவை மாநகரம் முழுவதும் உயர் தொழில்நுட்பம் உள்ள கேமராக்களை பதிக்க காவல்துறை முயற்சி செய்து வருவதாக கூறினார்
இதுவரை கொள்ளையன் விஜய் பணத்தை மட்டும் திருடியிருந்த நிலையில் தற்போது நகைகளை கொள்ளையடித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் அரூர் விஜய் பிடிக்கச் சென்றபோது வீட்டின் ஓட்டை பிரித்து அதன் வழியாக தப்பித்து சென்று விட்டார்.

இதுவரை விஜய் வெறும் 40 ஆயிரம் ரூபாய் திருடி இருந்த நிலையில் தற்பொழுது கோடிக்கணக்கில் மதிப்புள்ள நகையைத் திருடி இருப்பது காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.மேலும் விஜயை நிறுத்திவிட்டதாகவும் அவரை விரைந்து கைது செய்ய இருப்பதாக தெரிவித்தார்.தர்மபுரி மாவட்டம் அரூர் தனிப்படை போலீசார்  விஜய் வேற வழக்கிற்கு ஆனைமலை தேடி வந்தனர்.இந்த ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை தொடர்பாக கோவை தனிப்படை போலீசார் அரூரில் விஜயை தேடி வருவதாக கூறினார்.

திருடப்பட்ட நகைகள் மொத்தம் 4 கிலோ 600 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe