இதோ உங்களுக்கான 2024ஆம் ஆண்டான புது வருடர்த்திற்க்கான ராசி பலன்.. இந்த புத்தாண்டு யாருக்கெல்லாம் ராஜயோகம் தரப்போகிறது..!

published 1 year ago

இதோ உங்களுக்கான 2024ஆம் ஆண்டான புது வருடர்த்திற்க்கான ராசி பலன்.. இந்த புத்தாண்டு யாருக்கெல்லாம் ராஜயோகம் தரப்போகிறது..!

கோவை: புது வருடமான 2024 ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது இந்த புத்தாண்டு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வாழ்வில் புதுமைகளை அள்ளி கொடுக்கப்போகிறது என்பதனை பார்ப்போம்

மேஷம்: மேஷ ராசிக்காரர்களே வருகின்ற 2024 ஆம் ஆண்டு முதல் குரு, ராகு கேதுவின் மற்றும் சனி, ஆகிய கிரகங்களின் பயணம் சாதகமாக அமையவுள்ளது. அதுமட்டுமில்லாமல். இந்த ஆண்டு உங்களுக்கு மிக லாபகரமான ஆண்டாக அமையப்போகிறது. இதுவரை ஜென்ம குருவாக இருந்த குரு பகவான் குடும்ப குருவாக மாறப்போகிறார். பணம் உங்களைப் பல வழிகளிலும் வந்து சேரும். பணப் பரிமாற்றத்தில் நாணயமாக இருப்பீர்கள். வேலையில் மரியாதை உயரும். புதிய முயற்சிகள் கைகூடும். படித்து பட்டம் பெற்று தகுதிக்கேற்ற வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும்.

ரிஷபம்: வருகின்ற 2024 ஆம் ஆண்டு லாப ராகு, தொழில் சனி விரைய குரு, என்று நவகிரகங்களின் பயணம் உள்ளது. நீங்கள் எதிர்பார்த்த உயர் பதவி கிடைக்கும். உங்களுடைய குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியம் நடைபெறும். உங்களது புதிய முயற்சிகள் கை கூடும், உங்களின் கனவுகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொட்டது துலங்கும், வெற்றிகள் உங்களைத் தேடி வரும். உங்கள் வாழ்க்கையில் சகல பாக்கியத்தையும் நீங்க அடையப்போகிறீர்கள். லாப ராகுவினால் உங்களுக்கு நிறையப் பண வருமானம் வரும். சந்தோஷம் தரும் சுப விரயங்களும் நடைபெறப்போகிறது. வருமானம் அதிகரிக்கும். தொழில்கள் மீண்டு அதிக லாபம் தரும். வருகின்ற 2024ஆம் ஆண்டில் வீட்டுமனை வாங்கும் யோகமும் அமையும். உங்கள் கடன்கள் அடைபடும். 

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களே..! புதனை ராசி அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு வருகின்ற 2024ஆம் ஆண்டு உங்களுக்கு அற்புதமான ஆண்டாக அமையவுள்ளது. உங்கள் வேலையில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றமும், முன்னேற்றமும் கிடைக்கும். சம்பள உயர்வு தேடி வரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். அசையா சொத்துகள் வாங்கும் நேரம் கை கூடி வரப்போகிறது. சேமிப்பு உயரும். புதிய வேலை கிடைக்கும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.

கடகம்: கடக ராசிக்காரர்களே உங்களுக்கு அஷ்டமத்து சனியாக இருந்தாலும் விபரீத ராஜயோகம் வருகின்ற ஆண்டு கிடைக்கப்போகிறது. குரு பகவான் லாப வீட்டில் பயணம் செய்து பணத்தை உங்களுக்கு அள்ளித்தரவிருக்கிறார். நீங்கள் எதிர்பாராத பணம் பல வழிகளில் உங்களை வந்து சேரும். வீண் செலவுகள் குறையும். வேலையில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். பதவிகளும்,  பட்டங்களும் உங்களைத் தேடி வரும், உங்கள் எல்லா கனவுகளும் பூர்த்தியாகும். ஊதிய உயர்வு கிட்டும் கிடைக்கும். சொந்த தொழிலாக இருந்தாலும் சரி கூட்டுத் தொழிலாக இருந்தாலும் சரி உங்களின் லாபம் அதிகரிக்கும்.

 

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe