நாம் ரயில் பயணம் செய்வதற்காக டிக்கெட் எடுத்து கன்பர்ம் சீட் கிடைத்த பின்னர் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் போயிருக்கும்.
நாம் அந்த டிக்கெட்டை கேன்சல் செய்யாமலும் விட்டிருப்போம் அதனால் நமக்கு பணவிரயம் தான் மிச்சம், அதுமட்டுமின்றி சரியான காரணங்களுடன் கேன்சல் செய்தால் கூட கட்டணத்து தொகையில் கணிசமான தொகை பிடித்தம் செய்யப்பட்டு தான் மீதி வழங்கப்படும். .
ஒரு சில சமயங்களில் ரயிலை மிஸ் செய்துவிட்டால் பணம் கிடைக்காமலும் கூடப் போகலாம்.
ஆனால் இப்போது அப்படியல்ல சார்ட் தயாராகி கன்பர்ம் செய்த டிக்கெட்டை கேன்சல் செய்தால் கூட அதை ரீபண்டு செய்து கொள்ளலாம் அதற்கான புதிய சலுகையை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.
அது என்னப்பா அந்த வழி… !
இதோ உங்களுக்காக …….! கவனமாகப் படியுங்கள்.
டிக்கெட் டெபாசிட் ரெசிபிட்- டிடீஆர் எனப்படும் Ticket Deposit Receipt (TDR) என்பதுதான் அந்த புதிய வழிமுறை.
இதன்படி புதிய வழிமுறையின் படி சரியான காரணங்களுடன் நீங்கள் உங்களது கன்பர்ம்டு டிக்கெட்டை கேன்சல் செய்தால் அதற்கான ரீபண்டு உங்களுக்குக் கிடைக்குமா இல்லையா என்பதை டிடீஆரை பைல் செய்து தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் உங்கள் டிக்கெட்டுக்கு ரீபண்டு தருவது என்பது பற்றிய முடிவு முழுக்க முழுக்க மண்டல ரயில்வே டிவிஷனின் கையில் தான் உள்ளது. நீங்கள் சரியான காரணத்துடன் உங்கள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் அதனை மண்டல ரயில்வே அலுவலகம் ஏற்றுக் கொண்டால் டிடீஆரில் நீங்கள் கொடுத்த விண்ணப்பத்தின் படி உங்களுக்கான ரீபண்டு எவ்வளவு என்பது முடிவாகும்.
சார்ட் தயாரான பின்னரும் டிக்கெட்டை கேன்சல் செய்வதற்காக ஆன்லைன் மூலம் நீங்கள் டிடீஆர் பைலிங்கை பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி உங்களது ரீபண்டு குறித்த விவரங்களை அதில் டிராக் செய்தும் கொள்ளலாம்.
ஐஆர்சிடிசி யின் இணையதளத்தில் நீங்கள் ரயில்வே விதிகளுக்கு உட்பட்டு டிடீஆரை பைல் செய்யாது கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனாலும் உங்களுக்கான ரீபண்டு செய்யும் முடிவை ரயில்வே விதிகளின்படி சம்பந்தப்பட்ட மண்டல ரயில்வே அலுவலகம் தான் முடிவெடுக்கும். ஐஆர்சிடிசிக்கு அதில் தொடர்பில்லை. உங்களது டிக்கெட்டை கேன்சல் செய்தவுடன் டிடீஆரை பைல் செய்யலாம். இ-டிக்கெட்களை ஆன்லைனில் கேன்சல் செய்துவிட்டு டிடீஆரை பைல் செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் ரயில்வே நிலைய ரிசர்வேஷன் கவுன்டர்களில் இருந்து உங்கள் டிக்கெட் வாங்கியிருந்தால் அதை நீங்கள் அருகில் உள்ள ஏதாவது ரயில் நிலையத்துக்கு சென்று தான் புக்கிங் கவுன்டரில் கேன்சல் செய்துவிட்டு டிடீஆர் பைல் செய்யலாம்.
நீங்கள் டிக்கெட்டை கேன்சல் செய்ய விரும்பினால் ரயில் கிளம்புவதற்கு நான்கு மணிநேரத்துக்கு முன்பாக டிக்கெட்டை கேன்சல் செய்யாவிட்டாலோ அல்லது டிடீஆரை பைல்செய்யாவிட்டாலோ ரீபண்டு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவே ஆர்ஏசி டிக்கெட்கள் என்றால் ரயில் கிளம்புவதற்கு அரை மணிநேரத்துக்கு முன்பாக கூட நீங்கள் டிக்கெடை கேன்சல் செய்துவிட்டு டிடீஆரை பைல் செய்யலாம். ஒருவேளை நீங்கள் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் எடுத்து சார்ட் தயாராவதற்கு முன்பாக அதை கேன்சல் செய்தால் அதற்கு டிடீஆர் பைல் செய்யத் தேவையில்லை. தானாக ரீபண்டு ஆகிவிடும்.
ஐஆர்சிடிசி யின் ரயில் கனெக்ட் ஆப் மூலம் டிடீஆரை பைல் செய்யும் முறை:
ஸ்டெப் 1: ஐஆர்சிடிசி யின் ரயில் கனெக்ட் ஆப்பை பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து லாகின் செய்யவும்.
ஸ்டெப் 2: 'Train' என்பதை செலக்ட் செய்துவிட்டு 'My Bookings'க்கு ஆப்சனுக்கு செல்லவும்.
ஸ்டெப் 3: நீங்கள் கேன்சல் செய்ய வேண்டிய டிக்கெட்டை கவனமாய் செலக்ட் செய்து அதனை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: இப்போது மேலே உங்களது வலதுபுறத்தில் உள்ள மெனு பட்டனை கிளிக் செய்த பின்னர் அதில் 'Cancel' லை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 5: உங்களது டிக்கெட்டை கேன்சல் செய்தவுடன் 'Train' எனும் பேஜின் மெயின் டாஷ்போர்டுக்கு செல்லவும். அங்கு 'File TDR' என்பதை கிளிக் செய்யவும்.
பின்னர் ரயில் டிக்கெட்டை எண்ணை தேர்ந்தெடுத்து எதற்காக டிடீஆரை பைல் செய்கிறீர்கள் என்பதற்கான சரியான காரணத்தை உள்ளிடவும். உங்களது காரணத்தைத் தெரிவிப்பதற்கு ஒரு ட்ராப் டவுண் மெனு வரும். அதில் உள்ள காரணங்களில் உங்களுக்கு பொருத்தமானதை செலக்ட் செய்யவும்.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிடீஆர் விண்ணப்பத்தை பைல் செய்யும் முறை:
ஸ்டெப் 1: https://www.irctc.co.in/nget/train-search என்ற ஐஆர்சிடிசியின் இணையதளத்தில் லாக்இன் செய்யவும்.
ஸ்டெப் 2: உங்களது புக்டு டிக்கெட்ஸ் செக்ஷனுக்குச் சென்று முதலில் டிக்கெட்டை கேன்சல் செய்யுங்கள். பின்னர் 'Services' டேபில் உள்ள 'File Ticket Deposit Receipt (TDR) செக்ஷனுக்குச் செல்லவும்.
ஸ்டெப் 3: இப்போது புதிய இணையப்பக்கம் ஓபன் ஆகும். அதில் உள்ள 'My Transactions' என்ற செக்ஷனில் உள்ள 'File TDR' என்ற பட்டனை கிளிக் செய்யவும். அதில் உங்களது காரணத்தை பதிவிடவும். பின்னர் டிடீஆரை பைல் செய்துவிட்டு 'Submit' பட்டனை கிளிக் செய்யவும். உங்களது டிடீஆர் பரிசீலிக்கப்பட்டு உரிய கட்டணம் ரீபண்டு ஆகும்.