கோவையில் மயிரிழையில் உயிர் தப்பிய முதியவர் : பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

published 1 year ago

கோவையில் மயிரிழையில் உயிர் தப்பிய முதியவர் : பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

கோவை: இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் மீது மோதிய தனியார் பேருந்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பும் பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசந்திரன் இவர் தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் டூ கோவை சாலையில் சென்று கொண்டுள்ளார்.

அப்போது மேட்டுப்பாளையம் கோவை சாலையை கடந்து செல்ல முயன்ற போது மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு சென்ற தனியார் பேருந்து அவர் மீது மோதியது.

இதில் தூக்கி வீசபட்ட ஜெயசந்திரன் பேருந்தின் பின் பக்க சக்கரத்தில் சிக்கிய நிலையில் சுதாரித்த பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தினை நிறுத்தியதால் சக்கரத்தில் சிக்கிய முதியவர் நூலிழையில் உயிர்தப்பினார்.தொடர்ந்து காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதும் பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி வீடியோ காட்சிகளை காண லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/PUgYwArs5WQ?si=DwY0ox4IXOoYfjeE

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe