கோவையில் சிறையில் ஐ.எஸ்.ஐ.எஸ் கொடி ; ஆசிப் முஸ்தகினுக்கு 29ம் தேதி வரை நீதிமன்ற காவல்…

published 1 year ago

கோவையில் சிறையில் ஐ.எஸ்.ஐ.எஸ் கொடி ; ஆசிப் முஸ்தகினுக்கு 29ம் தேதி வரை நீதிமன்ற காவல்…

கோவை: கோவை சிறையில் ஐ.எஸ்.ஐ.எஸ் கொடியை வரைந்து சிறை காவலர்களை மிரட்டியதாக கைது செய்யப்பட்ட ஆசிப் முஸ்தகின் என்ற கைதியை வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரோட்டை சேர்ந்தவர் ஆசிப் முஸ்தஹீன்(30). இவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததால் என்ஐஏ அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு என்ஐஏ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி ஈரோடு வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சம்பவத்தன்று சிறை எஸ்பி உத்தரவின் பேரில், ஜெயிலர் சிவராஜன் சிறையில் சோதனை மேற்கொண்டார்.

அப்போது ஆசிப் முஸ்தஹீன் அடைக்கப்பட்டிருந்த 10 ஏ பிளாக் 6வது அறையில் போலீசார் சோதனை செய்ய சென்றனர். ஆனால் அவர் போலீசாரை சோதனை செய்ய விடாமல் தடுத்தார். 
இதனால் மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரது அறையில் இருந்த ஜீன்ஸ் பேண்ட்டை சோதனை செய்த போது அதில் ஒரு வெள்ளை தாள் இருந்தது. அதில், கருப்பு மையால் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடி வரையப்பட்டு இருந்தது. அந்த கொடியை ஆசிப் வரைந்து வைத்துள்ளார்.

அந்த கொடியை போலீசார் கைப்பற்றினர். அப்போது ஆசிப் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "நான் எந்த கொடியை வரைந்து வைத்திருந்தால் உங்களுக்கு என்ன? சிறையில் இருந்து வெளியே சென்றவுடன் ஐஎஸ் அமைப்புக்கான பணியை மேற்கொள்ள உள்ளேன், அப்போது இந்த சிறையும் இருக்காது, நீங்களும் இருக்க மாட்டீர்கள்" என கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் ஆசிப் முஸ்தஹீன் மீது உபா சட்டம் (சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம்), அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 
தொடர்ந்து போலீசார் அவரை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா, ஆசிப் முஸ்தகினை வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe