சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்காலத்தில் வழிநடத்த மகேந்திர சிங் தோனி நல்ல முடிவெடுப்பார்-இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு...

published 1 year ago

சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்காலத்தில் வழிநடத்த மகேந்திர சிங் தோனி நல்ல முடிவெடுப்பார்-இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு...

கோவை: கோவை அவினாசி சாலையில் உள்ள  நட்சத்திர ஓட்டலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமியின் பயிற்சி விளையாட்டு மையத்தின் தொடக்க விழா நடைபெற்றது.இதில்  இந்திய கிரிக்கெட் அணி வீரர் அம்பத்தி ராயுடு பங்கேற்றார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னுடைய இடத்தை பூர்த்தி செய்வதற்கு சென்னை அணியில் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள்.ஏலத்திலும் சிறந்த வீரர்களை அணி நிர்வாகம் எடுக்கும்.ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணி மற்றும் தற்போது விளையாண்டு வரும் அணிகள் இணைந்து ஒரு அணியாக உருவெடுக்கும் போது வருங்காலத்தில் ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியும் என நம்புகிறேன்.

ருதுராஜ் சிஎஸ்கேவை எதிர்காலத்தில் வழிநடத்த தகுதியுடையவர் என நம்புகிறேன். இருப்பினும் மகேந்திர சிங் தோனி நல்ல முடிவெடுப்பார்.உலகக்கோப்பை தொடரில் ஒன்றரை மாதங்கள் சிறப்பாக விளையாடினோம்.விளையாட்டில் ஒரு மோசமான நாள் என்பது அமைவது இயல்பு.நம் அணி வீரர்களை குறை சொல்ல ஒன்றும் இல்லை.அன்றைய தினம் ஆடுகளம் அவர்களுக்கு கை கொடுத்தது.இருப்பினும் எந்தவிதமான ஆடுகளத்திலும் நம்மால் சிறந்து விளங்க முடியும்.

உலக கோப்பை இறுதி அன்று ஆடுகளம் Slow Wicket ஆக மாறியது.அதனை ஒரு காரணமாக கூறி விட்டு தப்ப முடியாது.கிரிக்கெட்டில் இது போன்று நடப்பது இயல்புதான்.

பென்ஸ்டோக்ஸ் சென்னை அணியில் இல்லை.நான் ஓய்வு பெற்று விட்டேன்.அந்த இடங்களை நிரப்ப வேண்டியுள்ளது அதை அணி நிர்வாகம்  கருத்தில் கொண்டு பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe