திடீரென சாலை மறியலில் இறங்கிய கோவை பள்ளி மாணவிகள்

published 1 year ago

திடீரென சாலை மறியலில் இறங்கிய கோவை பள்ளி மாணவிகள்

கோவை: அடிப்படை வசதி செய்து தராத தலைமை ஆசிரியை கண்டித்து கோவை அரசு பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை ராஜவீதி அருகில் தேர் நிலைத்திடல் அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் தலைமை ஆசிரியரை கண்டித்து சாலை மறியல் ஈடுபட்டனர்.

கழிவறைகள் சுத்தமாக இல்லாததால் சுகாதாரமற்ற முறையில் கழிப்பறைகள் இருப்பதாக பள்ளி மாணவிகள் பல நோய்களுக்கு ஆளாகியுள்ளனர் மேலும் இதுகுறித்து பலமுறை தலைமை ஆசிரியர்களுக்கு புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதுமட்டுமில்லாமல் பள்ளியில் உரிய குடிநீர் வசதி இல்லை என்றும் அதேபோல குடிநீர் சுத்தமாக இல்லை என்றும் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தற்கு T.C வாங்கிக் கொண்டு சுத்தமாக இருக்கும் பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டும் என்று பள்ளி மாணவர்களை மிரட்டியதால் பெற்றோர்களுடன் வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்

அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது சாலை மறியலால் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.பின்னர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விருந்து சென்று பள்ளி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிறகு பள்ளி மாணவர்களை கலைந்து சென்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe