தேர்தலுக்காக நாடகம் போடுவது திமுக தான்-வானதி சீனிவாசன் பேட்டி...

published 1 year ago

தேர்தலுக்காக நாடகம் போடுவது திமுக தான்-வானதி சீனிவாசன் பேட்டி...

கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உக்கடம் பகுதியில் பாஜக மண்டல அலுவகத்தை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து தொடர்ந்து செய்தியாளர்களிடம்  பேசிய வானதி சீனிவாசன், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு  கட்சியினுடைய செயல்பாடுகள் முழுமையாக தொடங்கிவிட்டது.ஒவ்வொரு பகுதிகளுக்கும் மண்டல அலுவலகம் தொடங்கி, மக்களின் கோரிக்கைகள், தேவைகளை அறிந்து செயல்படவும், கட்சியின் செயல்பாடுகள், மோடியின்  சாதனைகளை விளக்க வேண்டும்.தென் தமிழகத்தில், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கபட்டு உள்ளது, அங்கே பாஜக கட்சியின் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்,பாஜக மூத்த நிர்வாகிகள் பொன்ராதாகிருஷ்ணன், பலர் களத்தில் பாதிக்க பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.

ஆனால் தமிழகத்தில் பாதிக்கபட்ட மக்களை சந்திக்காமல் திமுக  தலைவரும் முதல்வரான மு.க.ஸ்டாலின் டெல்லியில் இண்டியா கூட்டணி பற்றி பேச சென்று உள்ளார். தேர்தலுக்காக  நாடகம் போடுவது திமுக தான்,மக்களை அலட்சியப்படுத்துவதாக உள்ளது.  கோவை மாவட்டம் பாஜக சார்பாக நிவாரண பொருட்கள் அனுப்பப்படுகிறது. 

கோவை மாநகராட்சிக்கு  200கோடி ரூபாய் நிதி தந்தும், சாலைகள் சரியாக போடவில்லை.ஒப்பந்தகார்கள் மக்கள் வரி பணத்தை வீண் அடிக்கின்றனர்.அவர்களுக்கு  மாநகராட்சி கமிஷனர் விளக்க நோட்டீஸ் அனுப்பவே  நேரம் சரியாக இருக்கிறது.மத்திய அரசு நிவாரண நிதியாக  1200கோடி ரூபாய் தந்தது. ஆனால் திமுக மக்களை ஏமாற்றும் வேலையாக செய்து வருகின்றனர்.சென்னையில் பாதிக்கபட்டவர்களின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தாமல், ஏமாற்றி டோக்கன் தருகிறோம் என்று அதற்கு பணம், ரேஷன் கடையில் பணம் பெற நீண்ட வரிசையில் நிற்க வைத்து பெண்களை அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள்.

தென் மாவட்டத்தில் பாதிக்கபட்ட மக்களை பாதுகாப்பதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ராணுவ ஹெலிகாப்டர்களை அனுப்பி மீட்பு பணிகளை செய்ய உதவிகளை செய்து வருகின்றனர்.அதே போல நிவாரண உதவிகளும் செய்து வருகின்றனர்.

செந்தில் பாலாஜி ஜெயிலில் இருந்தும், துறையில்லாத அமைச்சர் என நம்மை ஏமாற்றினர்.அதே போல தான் பொன்முடி அமைச்சர் பதவி மட்டும் இல்ல எம்எல்ஏ பதவி பறி போகும் நிலை தான் உள்ளது என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe