கோவையில் ஆட்டோ ஓட்டுநர்களிடம் ஆதார் கேட்கும் காவல்துறை..!

published 2 years ago

கோவையில் ஆட்டோ ஓட்டுநர்களிடம் ஆதார் கேட்கும் காவல்துறை..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/HnNiEmYAweu4lUIbHWUht6


கோவை: ஆட்டோ ஓட்டுநர்களிடம் ஆதார் எண் கேட்பதைத் தவிர்த்திட கோரி கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் ஆட்டோ தொழிலாளர் அனைத்து சங்க கூட்டு கமிட்டியினர் மனு அளித்தனர்.

கோவை மாநகர காவல் துறையால் கோவையில் உள்ள ஆட்டோ நிறுத்தங்களில் ஒரு படிவம் வழங்கப்பட்டு வருகிறது. அப்படிவத்தில், ஆட்டோ நிறுத்தம் சார்ந்துள்ள சங்கம், ஓட்டுனரின் வீட்டு விலாசம், கைப்பேசி எண், ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. ஆட்டோ நிறுத்தங்கள் மற்றும் ஓட்டுநர் எண்ணிக்கை தகவல்களை சேகரிப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. 

அதே நேரத்தில் ஆதார் எண்ணை கேட்பது ஏற்புடையதாக இல்லை. அரசே ஆதார் எண்ணை பொதுவெளியில் பகிர வேண்டாம் என அறிவித்துள்ள போதும் காவல்துறையால் ஆதார் எண்ணை வழங்குமாறு நிர்பந்திகின்றனர். எனவே, தாங்கள் இப்பிரச்சினையில் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கேட்டு கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்தனர். 

மனு அளிக்கும் போது கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் அனைத்து சங்க கூட்டு கமிட்டி நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe