உள்ளூர் வியாபாரிகளும் ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்யலாம் : கோவையில் புதிய செயலி அறிமுகம்

published 2 years ago

உள்ளூர் வியாபாரிகளும் ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்யலாம் : கோவையில் புதிய செயலி அறிமுகம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/HnNiEmYAweu4lUIbHWUht6

கோவை: உள்ளூர் வியாபாரிகளும், விற்பனையாளர்களும் ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் விதமாக புதிய செயலி கோவையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

ஜிங்கிள்பிட் என்ற செயலி சென்னையை மையமாக கொண்டு கடந்த 2020ம் ஆண்டு துவக்கப்பட்டது. உள்ளூர் வியாபாரிகள் தங்கள் அருகில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான பொருளை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யும் விதமாக இந்த செயலி துவங்கப்பட்டது. தற்போது சென்னையில் சுமார் 4000 விற்பனையாளர்கள் இந்த செயலில் இணைந்துள்ள நிலையில் கோவையிலும் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து குறித்து ஜங்கிள்பிட் அதன் நிர்வாகிகள் கிருஷ்ணன் நாரணப்பட்டி, சுதர்ஷன் பாபு, வெங்கடேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீவாஸ் அனந்தராமன்  ஆகியோர் கூறியதாவது:

ஆன்லைன் வணிகத்தால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் விற்பனையாளர்கள் தங்களது வியாபாரத்தையும் இணையும் மூலம் மேற்கொள்ளும் விதமாக இந்த செயலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் வணிகர்கள், புதிய டிஜிட்டல் வடிவிலான வணிக உலகை தொடங்க இந்த செயலி வழிகாட்டியாக இருக்கும். தமிழ்நாட்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 20 ஆப்லைன் விற்பனையாளர்கள் ஆன்லைன் வியாபாரத்திற்கு சென்று வருகின்றனர்.

தற்போது இந்த செயலில் மூலம் மொபைல் போன், அதன் உதிரி பாகங்கள், வீட்டு உபயோக எலக்ட்ரானிக்ஸ், பயன்பாட்டு பொருட்கள், மடிக்கணினிகள் மற்றும் கணினி உதிரிபாகங்களை விற்பனை செய்ய முடியும். கோவை போன்ற நகரங்களில் இந்த செயலிக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஜிங்கிள்பிட்உடன் பங்குதாரராக மாறிய பல சென்னையை சேர்ந்த விற்பனையாளர்கள், தங்களது மாதாந்திர விற்பனையில் 30 சதவீதம் உயர்வு பெற்றுள்ளனர்.

உள்ளூர் விற்பனையாளர்கள் தங்கள் அருகில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் பொருட்களை விற்பனை செய்யமுடியும். எங்களது டெலிவரி குழுக்கள் அடுத்த 24 மணி நேரத்தில் அந்த பொருளை வாடிக்கையாளருக்கு கொண்டு சேர்க்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe