கோவையில் வாஜ்பாயின் பிறந்தநாள் விழா...!

published 1 year ago

கோவையில் வாஜ்பாயின் பிறந்தநாள் விழா...!

கோவை: இந்தியாவின் முன்னாள் பிரமதர் பாரத ரத்னா அமரர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாள் விழா கோவை சித்ரா அருகில் கொண்டடப்பட்து.

சுதந்திரப் போராட்டத்தின்போது, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்ற,  ஒன்பது முறை மக்களவைக்கும் இரண்டு முறை மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட,  முன்னாள் பிரதமர், வாஜ்பாயின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு அவிநாசி சாலை சித்ரா சிக்னல் பகுதியில் காளப்பட்டி பா.ஜ., மண்டல் சார்பாக அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும்,  பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் 250 ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக  சித்ரா சிக்னல் பகுதியில் உள்ள பாஜக கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்  மாநில துணைத்தலைவர் Prof கனகசபாபதி,  தேசிய செயற்குழு உறுப்பினர் 
GK செல்வகுமார்,  மாநில தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார்,  OBC அணி மாநில துணைத்தலைவர் பழனிச்சாமி,காளப்பட்டி  மண்டல் தலைவர் செல்வராஜ்,  மாவட்ட பொருளாளர் செந்தில், மாவட்ட துணைத்தலைவர் துரைமோகன்ராஜ், 
கவுண்டம்பாளையம் சட்டமன்ற பொறுப்பாளர் V.N ராஜன், மண்டல் பொருளாளர் சம்பத்,மண்டல் பொதுசெயலாளர் பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி பொது செயலாளர் பிரதேவ் ஆதிவேல், நமோ ஆஃப் மாவட்ட பொறுப்பாளர் சதிஷ், கணேசன் திவாகர், கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஸ்ரீதேவி, துணைத்தலைவர் சர்மிளா,  மண்டல் துணைத்தலைவர் K.ரவி, 23 வார்டு பொறுப்பாளர் சிவலிங்கம்,  23  வது வார்டு நிர்வாகிகள் பாஜக  மாவட்ட , மண்டல் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe