ரூ.6 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்.. இன்றைய விலை நிலவரம்..!

published 1 year ago

ரூ.6 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்.. இன்றைய விலை நிலவரம்..!

கோவை: தமிழகத்தில் இன்று தங்கம், மற்றும் வெள்ளி விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை  நிலவரத்தை இந்த செய்தியில் காணலாம்.  

தங்கம் விலை கடந்த10 நாட்களுக்கு முன்பு அதிரடியாக குறைந்துவந்தது. கிராமுக்கு ரூ.1000 வரை குறைந்து மக்களை மகிழ்ச்சியடையச் செயதது. கடந்த வாரத்திலும் ஒரு சில தினங்களில் தங்கம் விலை சரிவை சந்தித்தது.

கடந்த 3 தினங்களாக தங்கம் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 5,895க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.47,160ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்துள்ளது.

பவுனுக்கு ரூ.12 விலை அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.4,829 ஆகவும், ஒரு சவரன் ரூ.38,632 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 30 பைசா அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.81,000ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe