உதவி செய்வது போல் நடித்து பெண்ணிடம் செயினை பறித்து செல்ல முயன்ற நபர்கள்- பரபரப்பு சிசிடிவி காட்சிகள்...

published 1 year ago

உதவி செய்வது போல் நடித்து பெண்ணிடம் செயினை பறித்து செல்ல முயன்ற நபர்கள்- பரபரப்பு சிசிடிவி காட்சிகள்...

கோவை: கோவை அன்னூர் அருகே பெரிய புத்தூர் பகுதியில் பொருள் வாங்க வந்தது போலும் உதவுவது போலும் நடித்து இளம் பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பெரிய புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரேணுகா. இவர் அதே பகுதியில் மளிகை கடை, கால்நடை தீவனம், எலக்ட்ரிக் ஹாட்வேஸ் கடை ஆகியவற்றை நடத்தி வருகிறார்.

இவருக்கு உறுதுணையாக அவரது மகள் இருந்து வருகிறார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இவர்களது கடைக்கு இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் பொருட்கள் வாங்குவது போல் பாவனை செய்துள்ளனர்.

அப்போது கடைக்கு வந்த மற்றொரு முதியவர் அந்த கடையில் கால்நடைக்கு தீவன மூட்டையை வாங்கி இருசக்கர வாகனத்தில் அந்த வைத்த போது அந்த வாகனம் கீழே விழ கடையின் உரிமையாளரான ரேணுகா மற்றும் அவரது மகள் இருவரும் முதியோருக்கு உதவி புரிந்தனர். இதனை பயன்படுத்தி கொள்ள மர்ம நபர்கள் எண்ணி உள்ளனர். அப்போது ஒருவர் அவரது பைக்கை ஸ்டார்ட் செய்து தயார் நிலையில் இருக்க  மற்றொருவர் அவர்களுக்கு உதவுவது போல நடித்து தீவன மூட்டையை முதியவரின் வாகனத்தில் ஏற்றிய உடனே ரேனுகாவின் மகள் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க நகையை கழுத்தில் இருந்து அறுத்து செல்ல செய்ய முயன்றுள்ளனர்.

ஆனால் நல்வாய்ப்பாக செயின் அறுந்து விலாமல் தப்பிய நிலையில் அந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் அங்கிருந்த தப்பி ஓடினர்.

இந்த சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் தற்போது அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகளை காண லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/8lQlKJvaupA?si=xRMsgtbs3FiTpVAG

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe