கோவை ஆத்துப்பாலம் மின் மயானம் தற்காலிகமாக மூடல்

published 2 years ago

கோவை ஆத்துப்பாலம் மின் மயானம்  தற்காலிகமாக  மூடல்

கோவை, ஜூலை.1-

கோவை ஆத்துப்பாலம் மின் மயானம் ஜூலை 11 ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 86 வது வார்டுக்குள்பட்ட ஆத்துப்பாலம் பகுதியில் மின் மயானம் உள்ளது.

இந்த மயானம், கோயமுத்தூர் சோஷியல் சா்வீஷஸ் டிரஸ்ட் என்னும் அறக்கட்டளை மூலமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 26 ஆம் தேதி மின் மயானத்தின் புகைபோக்கி கோபுரம் பழுதாகிச் சாய்ந்தது.

இந்த பழுதான புகைபோக்கி கோபுரத்தை சீரமைக்க கோயமுத்தூர் சோஷியல் சா்வீஷஸ் டிரஸ்ட் நடவடிக்கை மேற்கொள்வதால் ஜூலை 11 ஆம் தேதி வரை ஆத்துப்பாலம் மின் மயானம் தற்காலிகமாக மூடப்படுகிறது என்று மாநகராட்சி துணை ஆணையர் ஷா்மிளா தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe