எச்சரிக்கை: கோவையைச் சேர்ந்த பெண்ணுக்கு புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு

published 1 year ago

எச்சரிக்கை: கோவையைச் சேர்ந்த பெண்ணுக்கு புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு

கோவை: கோவை சேர்ந்த 34 வயது பெண்மணிக்கு ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று பரவி வருகிறது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்றின் வீரியம் அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு புதிய வகை ஜே.என்.1 என்ற கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இதனிடையே திருவள்ளூர், திருச்சி, கோவை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு ஜே.என்.1 வகை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு முடிவு தெரிய வந்துள்ளது. இதில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட புலியகுளம் பகுதியைச் சேர்ந்த 34 வயது பெண்ணும் ஒருவர்.

புதிய வகை தொற்று பாதிக்கப்பட்ட நால்வரில் இரண்டு பேர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது

எனவே கோவை மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe