கீரணத்தம் குடிசை மாற்று வாரியத்தில் சுகாதார சீர்கேடு...

published 1 year ago

கீரணத்தம் குடிசை மாற்று வாரியத்தில் சுகாதார சீர்கேடு...

கோவை: கோவை கீரணத்தம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இங்குள்ள குடியிருப்பில் கடும் சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘‘கீரணத்தம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 1280 வீடுகள் உள்ளது. இங்குள்ள மக்கள் அனைவரும் தினக்கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இந்த பகுதியில் நீண்ட காலமாக கழிவு நீர் மலத்துடன் கலந்து வெளியேறுகிறது. இதனால் ஏற்படும் சுகாதார சீர் கேட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதி அடைந்து வருகிறோம். மேலும் இங்கு குடிநீர் பிரச்னையும் உள்ளது. அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை’’. என்றனர். கொங்குநாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை நிறுவனர் இளங்கோவன் கூறுகையில். ‘‘கீரணத்தம் குடிசை மாற்று வாரிய பகுதியில், கழிவு நீர் மலத்துடன் வெளியேறுவது மட்டுமின்றி, சாக்கடை உடைந்து துர்நாற்றம் வீசுகிறது. இந்த சுகாதார சீர்கேட்டால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே மக்களின் நலன் கருதி அந்த பகுதியில் சுகாதார சீர்கேட்டை போக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’’. என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe