காலையில் சர்ச்.. அடுத்து கோவில்.. பின்னர் மசூதி.. சர்வமத பிரார்த்தனை செய்த கோவை மாணவர்கள்..!

published 1 year ago

காலையில் சர்ச்.. அடுத்து கோவில்.. பின்னர் மசூதி.. சர்வமத பிரார்த்தனை செய்த கோவை மாணவர்கள்..!

கோவை: கோயம்புத்தூர் விழாவின் முக்கிய நிகழ்வான ஒருமை பயணம் , கோயம்புத்தூரில் உள்ள 20 மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 120 மாணவர்களை கோயம்புத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் சென்று, அனைத்து மதங்களை புரிந்து கொள்ளவும், மதங்களின் மீதான அவர்களின் மதிப்பை வளர்க்கவும், பல்வேறு மத நம்பிக்கைகளை உணரவும் கோயம்புத்தூர் விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

காலையில் புனித மைக்கேல் தேவாலயத்திலிருந்து பயணத்தைத் தொடங்கிய மாணவர்கள், பின்னர் அருள் மிகு கோனியம்மன் கோயில், அத்தர் ஜமாத் மசூதி, குருத்வாரா சிங் சபா மற்றும் ஜெயின் கோயில்களுக்குச் சென்றனர்.

இந்தப் புனிதத் தலங்களுக்குச் சென்ற அவர்களின் பயணத்தில் மாணவர்கள் ஒவ்வொரு மதத்தின் பழக்கவழக்கங்களின் படி வரவேற்கப்பட்டனர், மேலும் அந்தந்த மதங்களின் ஆன்மீகத் தலைவர்கள் அவர்கள் பின்பற்றும் கொள்கைகளையும் அவர்களின் வழிபாட்டு முறைகளையும் பகிர்ந்து கொண்டனர்.

வேற்றுமையில் ஒற்றுமையை போற்றும் வகையில்  போத்தனூரில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அனைத்து மதத்தினரும் பங்கேற்ற பிரார்த்தனை கூட்டத்துடன் இந்த பயணம் முடிவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிறைவு விழாவில் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், ஏ.ஜே.ராஜா, கோவை பகுதி தலைவர் சிஎஸ்ஐ கோவை மறைமாவட்டம், அப்துல் ஹக்கீம், ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிவில்  சர்வ சமயப் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe