பொங்கல் பரிசாக ரொக்கம் வழங்குவது உறுதி, யார் யாருக்கு வழங்கப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு…!

published 1 year ago

பொங்கல் பரிசாக ரொக்கம் வழங்குவது உறுதி, யார் யாருக்கு வழங்கப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு…!

 

கோவை: பொங்கல் பண்டிகையை ஒட்டி வழங்கப்படும் பரிசுப் பொருட்களுடன் ரூ ₹1000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படும். கடந்த 2022ம் வருடம் மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2023 வருடம் பரிசுப் பொருட்களில் மாற்றம் செய்யப்பட்டது. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசு பொருட்கள் கடந்த வருடம் வழங்கப்பட்டது.

நடப்பு ஆண்டான 2024 இன் பொங்கல் பரிசு:  வருடப் பரிசு: இந்த வருடமும் நியாயவிலைக்கடை அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்தது தமிழ்நாடு அரசு கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி, தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் ஆகியவை பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த நிலையில் இதற்காக ரூபாய் 238.92 கோடி செலவிடப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டிற்கான, பொங்கல் பரிசுத் தொகுப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்கிட 31.12.2023 அன்றைய தேதி நிலவரப்படி, 2,19,57,402 எண்ணிக்கையிலான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிடும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் முதலைச்சர் ஸ்டாலின் மீண்டும் 2024ம் வருடப் பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என்று அரசு முடிவு செய்துள்ளது. ஆகையால் பொங்கலை ஒட்டி வழங்கப்படும் பரிசுத்தொகுப்புடன் ₹1000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். ஆதார் எண் அடிப்படையில் ஆய்வு செய்த போது மொத்தம் 2.20 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு  14.60 லட்சம் பேருக்கு வங்கிக் கணக்குகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆதலால் ரேஷன் கடைகளில் நேரடியாக ரொக்கமாக ரூ.1000 பணத்தை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

 இவ்வளவு நாட்களாக ரொக்கம் தொடர்பான அறிவிப்புகள் வெளிவரப்படாமல் இருந்ததற்கு என்ன காரணம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.எதிர்பாராத புயல் வெள்ளத்தால் தமிழகத்தில் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ. 6000 கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தென்காசி, கன்னியாகுமரியில் ரூ. 1000 வழங்கப்பட்டது. அதேபோல் மகளிர் உரிமை தொகை ரூ. 1000 மாதம் மாதம் வழங்கப்படுகிறது. இதனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட கூடுதல் நிதி நெருக்கடி காரணமாகவே இந்த முறை பொங்கலுக்குப் பணம் வழங்குவதில் தமிழ்நாடு அரசுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வந்தது. இதன் காரணமாகத் தீவிர ஆலோசனைக்குப் பின்.. பணம் கொடுப்பது தொடர்பான முடிவை முதல்வர் ஸ்டாலின் இன்று எடுத்துள்ளார்.அரிசி அட்டை தாரருக்கு ரூ, ௧௦௦௦ வழங்கப்படும், மேலும் வருமான வரி கட்டுவோருக்கு ரூ.௧௦௦௦ வழங்கப்படமாட்டாது, மேலும் அரசு ஊழியர்களுக்கும் ரொக்கம் வழங்கப்பட மாட்டாது என்று முதலைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் 


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe