ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி; கேம்ப் ஃபையர் போட்ட போது விபரீதம்...!

published 1 year ago

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி; கேம்ப் ஃபையர் போட்ட போது விபரீதம்...!

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரஹீசுதின்.  தனது  மனைவி  மற்றும்  3 பிள்ளைகளுடன்  அம்மாநிலத்தைச் சேர்ந்த அம்ரோஹா எனும்  மாவட்டத்தில்
வசித்து வருகிறார். 

நேற்று முன் தினம் இரவு அவர்களுடன் அவரது உறவினர்களின் பிள்ளைகள் இருவரும் அவர் வீட்டில் தங்கி இருந்த நிலையில், அனைவரும் உணவு அருந்திய பின்பு குளிர் அதிகமாக இருந்ததால் குளிர் காய விரும்பி அவர்கள் தங்கி இருந்த அறையில் நிலக்கரியைக் கொண்டு நெருப்பு மூட்டியுள்ளனர்.

அந்த   நெருப்பு அந்த நிலக்கரியினால் ஏற்பட்ட  நெருப்பின் புகை அவர்கள் தங்கி இருந்த  அறை முழுவதும் பரவியது. இந்த நிலையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 5 பிள்ளைகள் உட்பட 7 பேரும்  மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினர். அன்று நாள் முழுவதும் ரஹீசுதின்  வீடு திறக்கப்படாததால்,  அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

ஆகையால் அவர்கள் ரஹீசுதின் வீட்டு  கதவை உடைத்துக்கொண்டு சென்று பார்த்தனர். அப்போது வீட்டிலிருந்த அனைவரும் மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  இதில் ரஹீசுதினின் மூன்று குழந்தைகள் உட்பட அவரது உறவினரின் இரு குழந்தைகள் என  5 பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் ரஹீசுத் மற்றும் அவரது மனைவி  உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நிலக்கரியினால் நெருப்பு மூட்டியதால் ஏற்பட்ட புகையினால் தான் இருவர்கள் மூச்சுத்திணறி  உயிரிழந்திருக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்,  மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe