துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்...?

published 1 year ago

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்...?

சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்ட உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் மகனான உதயநிதி கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். தான் வெற்றிபெற்ற திருவல்லிக்கேணி தொகுதியில் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார். 

பல நேரங்களை தொகுதிக்குள்ளும் தொகுதி மக்களுடனும் செலவிட்டு வந்தார். அவரது நடவடிக்கைகள் பாராட்டுக்களைப் பெற்ற நிலையில் 2022ம் ஆண்டு அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரானார். 

அடுத்த சில மாதங்களிலேயே உதய் விரைவில் துணை முதல்வராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதற்கு முதலமைச்சரோ, மூத்த அமைச்சர்களோ பதில் ஏதும் சொல்லாமல் அமைதிகாத்து வந்தனர். 

இந்த சூழலில், விரைவில் உதய் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் வரும் 28ம் தேதி முதல் ஸ்பெயின், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். 

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து வெளிநாடு செல்லும் ஸ்டாலின் வெளிநாடுகள் 15 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். இதனால் வெளிநாடு செல்லும் முன் மகனுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்க ஸ்டாலின் முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியானது

முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்திற்கு முன்பாக அதாவது வரும் 24ம் தேதி உதய்க்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe